பாலையூர் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
பாலையூர் கைலாசநாதர் சிவன் கோயில் பாலையூர், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612 203
இறைவன்
இறைவன் : கைலாசநாதர் இறைவி : காமாட்சி
அறிமுகம்
கொல்லுமாங்குடி- எஸ்.புதூர் சாலையில் உள்ளது பாலையூர். இங்கு சற்று உள்ளடங்கிய அக்கிரகார தெருவின் கிழக்கில் ஒரு குளக்கரையில் உள்ளது. பாலை மரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் பாலையூர் ஆகி இருக்கலாம். 2007ல் குடமுழுக்கு நடைபெற்றபிறகு பூஜைகள் சரிவர நடைபெறவில்லை என்பதை கோயிலுக்கு செல்லும் பாதையே காட்டுகிறது. கருவேல முள் மரங்களை ஒதுக்கியவாறு கோயிலுக்கு செல்லவேண்டும். பூட்டப்பட்டு பல நாட்கள் ஆனது போன்ற ஒரு சூழல் காணப்படுகிறது. இறைவன் கருவறையும் அம்பிகை கருவறையும் ஓர் தகர கொட்டகை கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், பிரமன் துர்க்கை உள்ளனர். தோட்டம் புதர்கள் மண்டி உள்ளது உழவார பணிகள் மேற்கொள்ளவேண்டிய தருணம், அடுத்து வரும் மழைநாட்களில் இன்னும் அதிகமாய் வளர்ந்து நிற்கக்கூடும். விநாயகர், முருகன், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. நவகிரகத்துக்கு பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கில் பைரவர் ? , சனி மற்றும் சூரியன் தன் இரு மனைவியருடன் உள்ளார். இறைவன்- கைலாசநாதர் இறைவி- காமாட்சி # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி