பாபுராஜபுரம் மழுவேந்திய நாதர் சிவன்கோயில் தஞ்சாவூர்
முகவரி
பாபுராஜபுரம் மழுவேந்திய நாதர் சிவன்கோயில் பாபுராஜபுரம், திம்மக்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 302
இறைவன்
இறைவன்: மழுவேந்திய நாதர் இறைவி : பிரஹன்நாயகி
அறிமுகம்
கும்பகோணம் நகரின் மேற்கில் வெளிவட்ட சாலையில் உள்ளது பாபுராஜபுரம். பாபு என்ற வார்த்தைக்கு இறைவன் என்றே பொருள். இறைவன் எழில் கோலம் காட்டிய இடம் என்றே கொள்ளலாம். இங்கு பழமையான சோழர்கால கற்றளியாக உள்ளது. சிவாலயம். முன்னர் கிழக்கு நோக்கிய மூன்று பிரகாரங்களை கொண்டதாக இருந்த இக்கோயில் தற்போது பல ஆக்கிரமிப்புக்கு ஆளாகி ஒற்றை பிரகாரத்துடன் உள்ளது. மழுவேந்திய கோலம் காட்டியதால் இறைவன் இங்கு மழுவேந்திய நாதர் என அழைக்கப்படுகிறார். இறைவி பிரஹன்நாயகி எனப்படுகிறார். உயர்ந்த துவிதள கருவறை விமானம் மற்றும் அழகிய தேவகோட்டங்களுடன் கும்பபஞ்சரங்களும்,தாமரை தூண்களுடன் அழகான கருவறை கொண்டுள்ளது.. தென்புறம் தட்சணாமூர்த்தி இடம்பெற்றுள்ளார்.பின்புறம், வடக்கில் கோட்டத்து தெய்வங்கள் ஏதுமில்லை, துர்க்கை மட்டும் கோட்டத்தில் இருந்து சற்றே வெளியில் இழுக்கப்பட்ட நிலையில் இருத்தப்பட்டுள்ளார்.
புராண முக்கியத்துவம்
கோயிலின் கட்டுமானம் 800 ஆண்டுகளுக்கு குறைவில்லாத தன்மையில் உள்ளது. கருவறைக்கு முன்னர் அர்த்த மண்டபம் அதன் முன்னர் அம்பிகை கருவறையுடன் இணைந்த முகப்பு மண்டபம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் விநாயகர் வேறிடத்தில் இருந்த ஐயனார் மற்றும் ஒரு மாரியம்மன் சிலைகளும் இங்கே வழிபாட்டில் உள்ளன. கருவறையின் வலதுபுறம் ஒரு பீடம், பெரிய தலை ஒன்றும் கைகூப்பிய நிலையில் இரு சிலைகளும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கில் லட்சுமிநாராயணர் சிற்றாலயமாக அமைந்துள்ளது, இக்கோயிலும் தனித்து இருந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகி இங்கு கொண்டு வந்து தனி சன்னதியாக கட்டப்பட்டதா அதுவும் தெரியவில்லை, .ஆய்வாளர்கள் பார்த்து தகவல் தெரிவித்தால் அனைவரும் அறிந்து கொள்ள முடியும். பூஜை காலை மாலை என இருவேளை நடைபெறுகிறது. மணி என்ற இளைஞரும் அவரது வயதான தாயாரும் மட்டும் இக்கோயிலை வேளை தவறாமல் வெளி பிரகாரத்தினை மட்டும் திறந்து வைத்து பக்தர்களுக்காக காத்திருக்கின்றனர்…. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபுராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி