பழையனூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
பழையனூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில்,
பழையனூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும்சாலையில் ஆறு கிமீ தூரம் சென்றால் சாலை ஓரத்திலேயே பழையனூர் சிவன்கோயில் உள்ளது. வெண்ணாற்றின் வடக்கு கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், முகப்பில் மண்டபம் போன்ற நுழைவாயிலுடன் கோயில் உள்ளது அதனை கடந்தால் நீண்ட கருங்கல் மண்டபம் உள்ளது. இதில் இறைவனை நோக்கி நந்தி பலிபீடமும் உள்ளது. அதனை அடுத்து ஒரு மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என வரிசையாக உள்ளது. கருவறையில் இறைவன் அழகிய பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார்.
இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி
கருவறை கோட்டங்களில் தென்முகன் பிரம்மன் துர்க்கை உள்ளனர். தென்முகனும் பிரம்மனும் சோழர்கால சிலைகளாக இருத்தல் கூடும். சர்வமங்கல விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். தென்கிழக்கில் யாக மண்டபமும் வடகிழக்கில் பைரவர் சனிபகவான் நவக்கிரகங்களும் உள்ளன. மேலும் தெற்கு நோக்கிய ஆஞ்சநேயர் அங்கே தனி கோயில் கொண்டுள்ளார், அவரின் முன்னம் ஸ்ரீராமர் பாதமும் உள்ளது. ஆஞ்சநேயர் குடியிருப்பதால் கோயில் வளாகமெங்கும் துளசி நிறைந்து காணப்படுகிறது. கோயில் பரம்பரை டிரஸ்டி முறையில் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 130 வருடங்களில் நடைபெற்ற குடமுழுக்குகள் பற்றிய விபரங்கள் சுவற்றில் எழுதப்பட்டு உள்ளன. கோயில் வாயிலிலேயே குருக்கள் வீடு உள்ளது, பல தலைமுறைகளாக கைங்கர்யம் செய்து வருகின்றனர். அதனால் முறையாக காலை மாலை பூஜைகளும், மாத பட்ச விழாக்களும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழையனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி