Thursday Dec 26, 2024

பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி :

பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,

எமனேஸ்வரம், பரமக்குடி,

இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 623 701

தொலைபேசி: +91- 4564 – 223 054

இறைவன்:

வரதராஜப் பெருமாள்

இறைவி:

பெருந்தேவி

அறிமுகம்:

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு அருகில் உள்ள எமனேஸ்வரம் கிராமத்தில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது. மூலவராக வரதராஜப் பெருமான் கருவறையில் புண்யகோடி விமானத்தின் கீழ் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் முதலில் விமானத்தையும் பின்னர் இறைவனையும் வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டை பின்பற்றினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

புராண முக்கியத்துவம் :

முற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், தான் ஓரிடத்தில் கால்வாய்க்குள் சிலை வடிவில் இருப்பதாக உணர்த் தினார்.மகிழ்ந்த பக்தர் மறுநாள் அங்கு சென்றபோது, சுவாமியைக் கண்டார். அவரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.சுவாமிக்கு “வரதராஜப்பெருமாள்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பின்பு படிப்படியாக இங்கு கோயில் பெரிதாக கட்டப்பட்டது.

நம்பிக்கைகள்:

திருமண, புத்திர பாக்கியம் கிடைக்க சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

வைகாசியில் பிரம்மோற்ஸவம் கொண்டாடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை மட்டும் சுவாமி, வைர அங்கி அணிந்து காட்சி தருவார். எனவே இவருக்கு, “திருப்பதி பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.வைகாசி பவுர்ணமியன்று சுவாமி புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி, கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்குகிறார். அதன்பின், குதிரை வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து விமோசனம் தருகிறார். இந்த வைபவம் இங்கு மிக விமரிசையாக நடக்கும்.சித்திரைப் பிறப்பு மற்றும் ஐப்பசி வளர்பிறையில் வரும் நாகபஞ்சமியன்று, சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.

சிறப்பம்சம்: தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதிக்குப் பின்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது. சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், அக்னி கிரீடத்துடன் காட்சி தருகிறார்.வரதராஜரை இங்கு பிரதிஷ்டை செய்யும் முன்பு, இத்தலத்தில் இருந்த சீனிவாசப்பெருமாள், அலர்மேலு தாயாருடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரையும் மூலவராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.    

திருவிழாக்கள்:

வைகாசியில் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரமக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பரமக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top