பனஞ்சாடி திருநீலகண்டன் கோயில், திருநெல்வேலி
முகவரி
பனஞ்சாடி திருநீலகண்டன் கோயில், பனஞ்சாடி, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் – 627413.
இறைவன்
இறைவன்: திருநீலகண்டன்
அறிமுகம்
சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது. இக்கோயில் மொட்டையாண்டவர் கோயில் என்றும் தீருநீலகண்டர் கோயில் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இது முற்காலப் பாண்டியர் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. கோயிலின் மேற்கு, தெற்கு பகுதிகளின் சுவர்பகுதி வரை மண்ணுள் மறைந்துள்ளன. ஆடிப்பகுதி முதல் கூரைப் பகுதி வரை கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையாலான சிகரம் அமைந்துள்ளது. கபோதகத்திற்கு மேலும் கீழும் முறையே அமைந்துள்ள யாணை வரியும் அண்ண வரியும் குறிப்பிடத்தக்க கலைநயமுடையவை. கிரிவப் பகுதியில் நான்முகன், யோக நரசிம்மன், தட்சிணாரூர்த்தி போன்ற கற்சிலைகள் இருந்துள்ளன. அவை தற்பொழுது கோயிலுக்கு முன்பு உள்ள தரைப்பகுதியில் பரவலாகக் கிடக்கின்றன. கோயிலுக்கு முன்பு உள்ள பகுதியில் பல கல் நந்திகள் உள்ளன. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் மிக அருமையான கட்டுமானம். அழகு. உள்ளே மூர்த்தம் இல்லை..வெளியே சிதைந்த நிலையில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பனஞ்சாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்பாசமுத்திரம்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி