பஞ்சவடி காலாராம் திருக்கோயில், மகாராஷ்டிரா
முகவரி
பஞ்சவடி காலாராம் திருக்கோயில், பஞ்சவடி, நாசிக், மகாராஷ்டிரா – 422003.
இறைவன்
இறைவன்: இராமர் இறைவி: சீதா
அறிமுகம்
காலாராம் கோயில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் நாசிக் நகரின் பஞ்சவடி பகுதியில் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். இது நகரத்தின் மிக முக்கியமான கோவிலாகும். இந்தப் பகுதியிலுள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதும், மிகவும் எளிமையானதுமான கோயில்தான் காலாராம் மந்திர் ஆகும். இந்தக் கோயிலின் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ராமர் சிலை முழுவதும் கறுப்பு நிறக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்தக் கோயில் அனைவராலும் காலாராம் மந்திர் (கறுப்பு ராமரின் கோயில்) என்று அழைக்கப்படுகிறது. இராமரைப் போலவே சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிலைகளும் கறுப்பு நிறக் கல்லில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
கோயில் வளாகத்திற்குள் விநாயகர், அனுமன் ஆகியோருக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. 1790 க்கும் முற்பட்ட காலத்தில் பேஷ்வாவைச் சேர்ந்த சர்தார் ஒதேக்கர் இந்தக் கோயிலைக் கட்டியதுடன், இராமருக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தக் கோயிலைக் கட்டுவதற்குத் தேவைப்பட்ட கருங்கற்கள் ராம்சேஜ் என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் 23 லட்சம் ரூபாய் செலவில் 2,000 பேருடைய 12 ஆண்டு கால உழைப்பில் இந்தக் கோயில் உருவாகியுள்ளது.இந்தக் கோவில் சுமார் 75 மீ நீளமும், 34 மீ அகலமும், 70 மீ உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது. நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் உள்ளது. கோபுர கலசங்கள் தங்கத்தால் ஆனவை. இங்க இருக்கும் முன்புற மண்டபம் 12 அடி உயரம் உள்ள 40 தூண்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்க இராமநவமி மிகவும் விசேஷமாக கொண்டப்படும் விழாவாகும்.
நம்பிக்கைகள்
இந்த வனத்தில் மிகக்கொடிய அசுரர்களும், பிரம்மராட்சதர்களும் இருந்தார்களாம். அவர்கள் அங்கு தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களுக்கு பலவித தொல்லைகளை தந்து அவர்களை பயமுறுத்தி தவத்தை கலைக்கவும் செய்தனராம். அந்தச்சமயத்தில்தான் அவர்கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்து தியானித்தனர். முனிவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த வனத்திற்கு வந்த இராமர் தன்னுடைய உருவத்தை மிகப்பெரிய கருப்பு உருவமாக மாற்றி அந்த ராட்சதர்களுடன் சண்டை இட்டாராம். பின்பு அங்கிருந்த முனிவர்களால் வணங்கப்பட்டது என்றும் சொல்லப்படுது .
சிறப்பு அம்சங்கள்
சத்யயுகத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்த 14 வருடங்களில் இரண்டரை வருடம் இந்த தண்டகாரண்ய வனத்தில், இந்த காலாராம் கோவில் இருக்கும் இடத்தில்தான் குடிலிட்டு வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தில் இந்த நாசிக் பகுதியை பற்றி விவரிக்கின்றது. அனுமனின் கோவிலில், அனுமனின் சிலையில் இருந்து ராமர் சிலை தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமரின் பிரதான கோவிலில் 14 படிகள் உள்ளன, இது ராமரின் 14 வருட நாடுகடத்தலைக் குறிக்கிறது.
திருவிழாக்கள்
இங்க இராமநவமி மிகவும் விசேஷமாக கொண்டப்படும் விழாவாகும்.
காலம்
7-11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பஞ்சவடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாசிக் சாலை நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
நாசிக்