பகால் புத்த கோவில், இந்தோனேசியா
முகவரி
பகால் புத்த கோவில், தேச பஹால், பதங் போலக், சிபத்து, படாங் லாவாஸ் உத்தரா, வடக்கு சுமடெரா, உத்தரா – 22741, இந்தோனேசியா
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
பகால் கோயில் இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் படாங் லாவாஸ் ரீஜன்சியில், போர்டிபியில், படாங் போலக் என்னுமிடத்திலுள்ள பகாலில் அமைந்துள்ளது. மேடனில் இருந்து 400 கி.மீ.தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்த வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. அவை பகால் கோயில் I, பகால் கோயில் II, மற்றும் பகால் கோயில் III என்பனவாகும். இந்தக் கோயிலின் இடமானது கி.பி 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை பன்னாய் இராச்சியத்துடன் தொடர்புடையதாகும்.
புராண முக்கியத்துவம்
பகாலின் மூன்று கோயில்களும் சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன. கோயிலின் வளாகம் உள்நாட்டில் பியாரோ ( விஹாரா அல்லது மடம்) என அழைக்கப்படுகிறது, இது அதன் அசல் பயன்பாட்டிற்கான குறிப்பை உணர்த்தும் வகையில் உள்ளது. பகால் கோயில்களின் மூன்று பெயர்கள் நேபாளம் மற்றும் இலங்கையுடன் உள்ள தொடர்புகளைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. பகால் என்னும் சொல் இன்னும் நேபாளத்தில் வஜ்ராயனா பிரிவைச் சேர்ந்த இரட்டைத் தள அமைப்பைக் கொண்ட கோயில்களைக் குறிக்கிறது. இந்த மதம் இந்தோனேசியாவில் பௌத்த மதத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. பகால் கோயிலில் காணப்படுகின்ற சிங்க சிற்பங்கள் 11ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலைநகராக இருந்த பொலனருவாவில் உள்ள சிற்பங்களை ஒத்த நிலையில் காணப்படுகிறது. இந்த வளாகம் வடக்கு சுமத்ராவில் மிகப்பெரிய வளாகம் ஆகும். பகாலின் மூன்று கோயில்களும் சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டன. அதே நேரத்தில் சிற்பங்கள் மணல் கற்களால் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோயிலும் 1 மீட்டர் தடிமன் மற்றும் 1 மீட்டர் உயரம் கொண்ட சுற்றளவில், சிவப்பு செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்வதற்கு கிழக்கு சுவரில் ஒரு வாயில் உள்ளது. அங்குள்ள கதவு இரு பக்கங்களிலும் 60 செமீ உயரத்தில் உள்ளது. ஒவ்வொரு வளாகத்தில் உள்ள முதன்மைக் கோயிலும் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கட்டிடக்கலை கிழக்கு ஜாவாவில் பிரபோலிங்கோ என்னும் இடத்தில் உள்ள ஜபாங் கோயிலை ஒத்த நிலையில் உள்ளது. .
காலம்
11 – 13 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பகால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வடக்கு சுமத்ரா
அருகிலுள்ள விமான நிலையம்
தபிங்