நெல்லிக்குப்பம் ஸ்ரீ மல்லீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
நெல்லிக்குப்பம் ஸ்ரீ மல்லீஸ்வரர் சிவன்கோயில், நெல்லிக்குப்பம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ மல்லீஸ்வரர் இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்லிக்குப்பம் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் சுமார் 12 கி.மி. தொலைவில் உள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் பழமையான சிவன் ஆலயமும், பெருமாள் ஆலயமும் தற்போது உள்ளன. சிவன் கோயில் தற்சமயம் சிறிய கொட்டகையில் கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ளது. ஸ்வாமி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ மல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பாதம் மட்டும் கோயில் பின்புறம் காணப்படுகிறது. அதோடு இரண்டு சிவலிங்கம் ஒரு ஆவுடையார் காணப்படுகின்றன. தினசரி பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு சாம்பசிவம்-9360730995, திரு திருஞானசேகர்-9381887280, திருமதி தேவி-9962048372.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெல்லிக்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மறைமலைநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை