நெல்லிக்குப்பம் வசந்தம்நகர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
நெல்லிக்குப்பம் வசந்தம்நகர் சிவன்கோயில்,
நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607105.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கடலூரில் இருந்து மேற்கில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது நெல்லிக்குப்பம். இவ்வூரின் மேற்கில் உள்ளது இந்த வசந்தம்நகர். நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து பண்ருட்டி சாலையில் ½ கிமீ சென்றால் இடது புறம் ஒரு BharathPetroleum bunk உள்ளது. அதனை தாண்டினால் சாலையில் ஒரு அம்பேத்கர் சிலையும் இருக்கும் அந்த இடத்தில் இருந்து வலது புறத்தில் வடக்கு நோக்கி செல்லும் சாலையில் சில நூறு மீட்டர்கள் சென்றால் உள்ளது வசந்தம் நகர். இங்கு ஒரு சிறிய சிமென்ட் ஸ்லாப் தடுப்பு கொண்டு நான்கு புறமும் அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி உள்ளார். தனித்த லிங்கமூர்த்தி, பெரிய அளவில் உள்ளது. நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோயிலின் அஷ்ட திக்கு லிங்கங்களில் ஒன்றாக இருக்கலாம். சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விளக்குக்கு எண்ணை, மற்றும் வஸ்திரங்கள் என வாங்கி கொடுத்து எம்பெருமானை பிரதோஷம் சிவராத்திரி போன்ற நாட்களில் வழிபட்டு மகிழ்கிறார்கள். இடம் கண்டுபிடிப்பது கடினம் அதனால் இந்த சுட்டியை உபயோகித்து சென்று வாருங்கள்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெல்லிக்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி