நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில்,
நெய்குன்னம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
இறைவன்:
திரியம்பகேஸ்வரர்
இறைவி:
விமலாம்பிகை
அறிமுகம்:
திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் – ம்ருத்யோர் – முக்ஷீயமாம்ருதாத். இப்படி அற்புதமான பொருளுடன் கூடிய இந்த மந்திரத்தில் திரியம்பகம் என்ற சொல் சிவ பெருமானின் முக்கண்ணைக் குறிப்பதாகும். இப்பெயரை கொண்டவரே இத்தல இறைவன் திரியம்பகேஸ்வரர். அம்பிகையின் பெயர் விமலாம்பிகை விமலம் என்றால் தூய்மையான அழகான என பொருள்
இப்படி இருவரும் சிறப்புமிக்க தலமான நெய்குன்னத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். குன்னம் என்றால் குன்றம் எனும் சிறிய மலையை குறிக்கும், நெய் மலையில் வீற்றிருந்த இறைவனை காண சன்னாநல்லூர் – திட்டச்சேரி சாலையில் புகலூர் தாண்டி போலகம் சாலை இடது புறம் திரும்பும் அதில் மூணு கிமீ சென்றால் போலகம் அங்கிருந்து திருமலைராஜன் ஆற்றின் தென்கரையில் மேற்கு நோக்கி ஒரு ½ கிமீ போனால் இந்த நெய்குன்னம் அடையலாம். பூந்தோட்டம்- காரைக்கால் சாலையில் பொறக்குடி வந்து அரசலாற்றை திருமலைராஜன் ஆற்றை கடந்தால் நெய்குன்னம் வரலாம்.
பல காலமாக சிதைவற்ற ஒரு சிவாலயத்தில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட இறைவனுக்கு புது கோயில் எடுப்பித்துள்ளனர். கோயிலின் முன் பல மரங்கள் உயர்ந்து நின்று நிழல் தந்து கொண்டிருக்கின்றன. கோயில் புத்தம் புதியதாக உள்ளது. மேற்கு நோக்கிய திருக்கோயில், இதுவே பெரிய சிறப்பு. அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார் இரு கருவறைகளையும் ஒரு நீண்ட மண்டபம் இணைக்கிறது. இந்த மண்டபத்தின் வெளியில் நந்திக்கொரு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. கருவறை கோட்டங்களில் பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் உள்ளனர். அம்பிகையின் கோட்டத்தில் சரஸ்வதி துர்க்கை உள்ளனர். பிரகாரத்தின் பின்புறம் ஒரு லிங்கமும் இரு பாணங்களும் உள்ளன. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெய்குன்னம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி