நீலவெளி சோமநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
நீலவெளி சோமநாதர் சிவன்கோயில், நீலவெளி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 306
இறைவன்
இறைவன்: சோமநாதர்
அறிமுகம்
மயிலாடுதுறையில் தெற்கில் உள்ள மங்கைநல்லூரில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் ஒன்பது கிமி தூரத்தில் உள்ளது நீளவெளி. சோமன் எனும் நிலவு வழிபட்ட இடம் என்பதால் நிலாவெளி என அழைக்கப்பட்டது பின்னர் நிலவெளி- நீளவெளி என உருமாறியது. இத்தல இறைவன் பெயரும் சோமநாதர். வீரசோழன் ஆற்றின் தென் கரையில் உள்ள பெரும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலம் மேற்கு நோக்கிய திருக்கோயிலாக இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் வழிபாடின்றி இடிந்து சிதிலம் அடைந்த வாயில்கள் மட்டும் உள்ளன. நடந்து தேய்ந்த வாயில் படிகள் இன்று இடிந்து மண்ணாகி கிடக்கின்றது. நிலைவாயில்கள் முள்கொடிகளால் மூடிக்கிடக்கின்றன. சோமநாதரும், அவர்தம் தேவியும், இன்னபிற தெய்வங்களும் ஒரே அறையில் வைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. வைக்க இடமில்லாமல் சில சிலைகள் வெளியிலும் கிடத்தப்பட்டுள்ளன. கோயில் பணிகளுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாயத்தில் வாழலாம் என்பர். அந்த செங்கல்லால் உருவான ஓர் கோயிலை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தால் அத்தனை ஆயிரம் வருடங்களையும் தாண்டி நாம் கயிலை ஈசனின் அன்புக்கு பாத்திரமாகலாம். இறைவன் சிதைந்த கோயில்களில் இப்படி காத்திருப்பது நம்மை பரிட்சித்து பார்ப்பதற்காகத் தானோ?? சிதைந்த கோயில்களை மீட்டெடுப்பதுஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமானம் ஆகும். மூழ்கி எடுக்கப்போகும் முத்து தான் பிறவியிலா பெருவாழ்வு. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீலவெளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி