நரிமணம் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நரிமணம் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில்,
நரிமணம், நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
அகஸ்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
காவிரி வெட்டாறாக பிரிந்து ஓடி கடலில் கலக்கும் இடம் தான் நாகூர், அது தென் கரை இந்த நரிமணம் வடகரை. திருவாரூர் –கங்களாஞ்சேரி – நாகூர் சாலையில் 16 கிமீ தூரத்திலும் நாகூரில் இருந்து 7 கிமீ தூரத்திலும் உள்ளது இந்த ஊர். இவ்வூரில் ஊரில் இருக்கும் விநாயகர்; வழக்கமாக நாம் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்வதை போல இங்கே அவரது தலையிலும் குட்டிவிட்டு செல்கின்றனர். இவரை குட்டுப்படும் விநாயகர் என சொல்கின்றனர். எதிரில் பெரியதொரு குளத்தை கொண்ட கிழக்கு நோக்கிய சிறிய திருக்கோயில்.
அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று அதனால் இறைவன் அகஸ்தீஸ்வரர் இறைவி சௌந்தர்யநாயகி. வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரண கோயில் என்றே தோன்றும் ஆனால், இக்கோயில் 1000 ஆண்டு பழமையான சோழர்கால கோயில், பிற்கால சோழர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. பிற்காலத்தில் நாயக்க மன்னராட்சி காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் வடக்கில் துர்க்கையும் மட்டும் உள்ளனர். வேறு கோஷ்ட மூர்த்திகளோ பிரகார சிற்றாலயங்களோ இல்லை. வடமேற்கில் ஒரு பாம்பு புற்று ஒன்றை சிமெண்ட்டால்? செய்துள்ளனர். வடக்கில் ஒரு கிணறும் உள்ளது. இறைவனது மண்டபத்தின் வெளியில் ஒரு நந்தி சிறிய மண்டபத்தில் உள்ளது. நித்திய பூஜை சிறப்பு நாட்களுக்கான பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரிமணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி