Saturday Jan 18, 2025

தேவர் கண்ட நல்லூர் பெத்தனாஸ்ரவன் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு பெத்தனாஸ்ரவன் திருக்கோயில், தேவர் கண்ட நல்லூர் மற்றும் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் – 613704. போன்: +91 98659 81789

இறைவன்

இறைவன்: பெத்தனாஸ்வரன் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

பெத்தனாஸ்வரன் கோயில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் தேவர் கண்ட நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். மூலவர் பெத்தனாஸ்வரன் மற்றும் தாயார் பெரியநாயகி. ஸ்தல விருட்சம் வேம்பு ஆகும். கோயிலில் உள்ள கிணறு இந்தக் கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம். கோவில் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

புராண முக்கியத்துவம்

வல்லால மகாராஜன் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டி பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தாயார் காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய தேவியார் அந்த மகாராஜன் தலையை வெட்டி விடுகிறார். தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்டராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். அதன் பின் இங்கு கோயில் எழுப்பியுள்ளனர். விநாயகருக்கு இந்த செயல் பிடிக்காததால் அவர் அங்கு வரவில்லை என்பதால் அவர் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யவில்லை. அதன் பின் அப்பகுதியினர் கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பலரும் குல தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். அதனால் கோயிலில் பல்வேறு விக்ரகங்களை காணிக்கையாக செய்து வைத்துள்ளனர்.

நம்பிக்கைகள்

சகல தோஷங்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பலருக்கும் குல தெய்வமாக உள்ளதால் குலதெய்வவழிபாடு நடக்கிறது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்ட அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவர் கண்ட நல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top