தேல் (இச்சாய் கோஷர் தேல்) சிவன் மந்திர், மேற்கு வங்காளம்
முகவரி
தேல் (இச்சாய் கோஷர் தேல்) சிவன் மந்திர், கெளரங்கபூர், மேற்கு வங்காளம் – 713152
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
இச்சாய் கோஷர் தேல், கோபுரக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, தேல்மந்திர் (ரேகா-தேல்), இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் கெளரங்காபூர் அருகே அமைந்துள்ளது. இது பெங்காலி கோவில்களின் துணைக்குழுவிற்கு சொந்தமானது. துர்காபூரிலிருந்து சிறிது தொலைவில் அஜய் ஆற்றின் கரையில் இச்சாய் கோஷர் தேல் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த செங்கல் கோவில் வங்காளத்தை விட ஒடிசாவின் சிறப்பான கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோபுர அமைப்பிற்கு பெயர் பெற்றது.
புராண முக்கியத்துவம்
கட்டுமானத் தேதி அல்லது கட்டியவர் பற்றிய தகவல்கள் ஏதுவுமில்லை. ஆனால் உள்ளூர் மக்கள் இந்த கோவில் ராஜா சித்ரா சென் ராய் அல்லது மகாராஜாதிராஜ் பகதூர் திலக் சந்த்ராயின் இராணி பிஷ்ணுகுமாரியால் கட்டப்பட்டதாக கருதுகின்றனர்., இந்த கோவில் சட்கோப் மன்னரின் குடும்பத்தாரால் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.. இந்த கோவில் முதலில் பகபதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது, ஆனால் உள்ளூர் மக்களால் வழிபடப்படும் சிவலிங்கத்தால் மாற்றப்பட்டது. கோபுரத்தின் மேல் பகுதியில் மலர் உருவங்கள், நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் உள்ளது. கோபுரத்தின் ஒவ்வொரு பகுதியும் இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், தொடர் வளைவுகள், சிற்பங்கள் மற்றும் கோபுரத்தின் அனைத்துப் பக்கங்களிலும் மீண்டும் மீண்டும் நிகழும் கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் போன்ற பல்வேறு அலங்காரங்களைக் கொண்டுள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக பெரும் சேதத்தை சந்தித்துள்ளது மற்றும் முகப்பில் உள்ள பெரும்பாலான அலங்காரங்கள் அடையாளம் காண முடியாதவை. இந்த கோவில் இப்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது, ஆனால் வானிலை மற்றும் பல தசாப்த கால புறக்கணிப்புகள் மற்றும் காலமற்றத்தால் கோவில் பெரிதும் சேதமடைந்துள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துர்காப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
துர்காப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
துர்காப்பூர்