தெத்தி – பசுபதி செட்டியார் தோட்டம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தெத்தி – பசுபதி செட்டியார் தோட்டம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்
தெத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் – 611001.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
நாகூர் தாண்டி நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்து EGS Pillai கல்லூரி சாலையில் சென்று பின், கல்லூரி வாயிலில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சிறிய மண் சாலையில் சென்றால் பசுபதி செட்டியார் தோட்டம் கோயிலை அடையலாம். பசுபதி செட்டியார் என்பவர் சில நூறாண்டுகளின் முன்னம் இலங்கையில் இருந்து இங்கு வந்த ஒரு வணிகர் என நினைக்கிறேன். இந்த ஆலயமும் இவரால் கட்டப்பட்டிருக்கலாம். சரியான தரவுகள் இல்லை. பழமையான கோயில் மற்றும் சுற்றுப்புற மண்டபங்கள் இடிந்து சரிந்துவிட்ட நிலையில் புதிய கோயில் எழும்பி உள்ளது.
இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி மீனாட்சி மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி விளங்குகிறது. இறைவன் மேற்கு நோக்கிய கருவறையும் இறைவி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளார். இறைவனின் நேர் எதிரில் அழகிய நந்தி உள்ளார். விநாயகர் சிற்றாலயம் தென்மேற்கிலும் முருகன் வடமேற்கிலும் உள்ளனர். காலை மாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி