திருவிடைவாய் புண்ணியகோடி நாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல் – 613 702, அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம் போன்: +91- 4366-232 853,94433 32853, 99431 52999,98942 89077, 70947 99791, 98
இறைவன்
இறைவன் – புண்ணியகோடி நாதர், விடைவாயப்பர், இறைவி – அபிராமி உமையம்மை
அறிமுகம்
புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கிமீ சென்றால் திருஇடைவாய் (திருவிடைவாய்)என்று அழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் இறைவன் புண்ணியகோடியப்பர், இறைவி அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.
புராண முக்கியத்துவம்
விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு திருவிடைவாசல் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் “விடை’ உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் “விடைவாயே’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.
நம்பிக்கைகள்
திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி