திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டரில் அமைந்துள்ளது ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.
மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும்
ஜோதியை யாம்பாட கேட்டேயும்
வாள்தடங்காண்
மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய்
வீதிவாய் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமலியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தால் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பவாய்
மாணிக்க வாசகப்பெருமான் ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் திருவெண்பாவை இயற்றி பாடியதால் அவ்விடத்திலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளனர்.