திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு)
முகவரி
ஸ்ரீவைகுண்டம்
இறைவன்
இறைவன்:ஸ்ரீவைகுண்நாதன்
அறிமுகம்
இதுவும்பூலோகத்தில்இல்லை . ‘நலமந்தமில்லாதோர்நாடு’ இது. இங்கு ‘சுடரொளியாய் நின்ற தன்னுடைச்சோதி’ ஆகியபரமன், 106 திவ்யதேசங்களையும் தரிசித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்த பின் இவ்விடத்தில் வாசஞ்செய்ய அழைத்துக்கொள்வதாக பெரியோர்வாக்கு. காட்சிகண்டவர்கள் : அநந்த, கருட, விஸ்வக்ஷேணாதி நித்யசூரிகள், முக்தர்கள். மங்களாசாஸனம் : பெரியாழ்வார் 4, ஆண்டாள் 1, திருமழிசையாழ்வார் 2, திருப்பாணாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 1, பொய்கையாழ்வார் 2, பேயாழ்வார் 1, நம்மாழ்வார் 24 ஆக 36 பாசுரங்கள்பாடியுள்ளனர். திருப்பதம பதத்திற்கிணையான ஷேத்திரமொன்று தமிழகத்தில் உள்ளது. அதனை தரிசிப்போம். திசாமுகச்சேரி (தியாமுகச்சேரி)
புராண முக்கியத்துவம்
இங்குறையும் இறைவனை திசைமுகன் அதாவது பிரம்மா வழிபட்டு பேறுபெற்றதனால் இவ்வூர் திசாமுகச்சேரி என்றழைக்கப்படுகிறது. கிருதயுகத்தில் ஒருகாட்டில் கஜேந்திரன் எனும் யானை தண்ணீர் குடிக்க குளத்துக்கு சென்றபோது முதலை அதன் காலை கவ்விக்கொண்டது, விடவில்லை. யானையின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இனி முடியாது என்ற நிலை வந்தபோது அந்த யானை பரபிரம்மத்தை நோக்கி சரணாகதியாக கூக்குரலிட்டது. அது வைகுண்டத்தில் வீற்றிருந்த பெருமாளின் காதில்பட்டது. உடனே அவர் அந்த கஜேந்திரனை காக்க புறப்பட்டுவிட்டார். ஏறிச்செல்ல கருடனை அழைக்கவில்லை. சரசர வென்று நடக்கின்றார். என்னடாஇது, பரமன் ஏதோ அவசரமாக போகின்றார், நம்மை அழைக்கவில்லையே என்று கருடன் அவர் பின்னாலேயே ஓடினான். பார்த்தீர்களா! தன்னுடைய பக்தன் சரண்வேண்டி கூக்குரலிட்டதும், அவனைகாக்கும் பொருட்டு, சக்ராயுதத்தை கையிலெடுக்க வேண்டுமே, பிரயாணத்திற்கு வாகனமாகிய கருடனைஅழைக்கவேண்டுமே, என்றெல்லாம் பகவான் நினைக்கவில்லை. பக்தன் கூப்பிட்ட குரலுக்கு கிளம்பிவிட்டார். இதுபாகவதத்தில் ‘கஜேந்திரமோட்சம்’ எனும் கதையில் வரும்.
சிறப்பு அம்சங்கள்
இயல்பாகவே உண்மை பக்தர்களின் குரலுக்கு உடனுக்குடன் போகவேண்டுமே என்பதற்காக, இடது காலை குப்பிட்டு குந்தியிருக்கிறார். இங்கு மூலவர் பரமபதநாதர். பெருமாள் எந்த நேரம் புறப்பட்டாலும் உடனே சுமந்து செல்ல தயார் நிலையில் கோயிலுக்கு வெளியில் அய்யனை கவனித்த படியாக கருடர் காத்திருக்கும் காட்சியும் அரிது. இப்பேர்பட்ட பரமபத க்ஷேத்திரத்தை சென்று தரிசித்து தியானித்து பரமபதத்திற்கு வழி வகுத்துக்கொள்வோமாக. “தத்புருஷாயவித்மஹே ஸ்ரீமன்நாராயணாயதீமஹி தன்ன:விஷ்ணுபிரசோதயாத்’ “அந்த மேலான தெய்வத்தை அறிந்துகொள்வோம். அதற்காக, அந்த ஸ்ரீமன் நாராயணனை தியானிப்போம். அந்தமகாவிஷ்ணுநம்மைவழிநடத்தட்டும்” “ஓம்நமோநாராயணாய”
0