Thursday Dec 26, 2024

திருத்தண்கா (தூப்புல்) விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501.

இறைவன்

இறைவன்: தீபபிரகாசர்

அறிமுகம்

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான திருமால் விளக்கொளி பெருமாள், தீப பிரகாசர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும். புராண காலத்தில் இக்கோயில் திருத்தண்கா என்று அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும்.

புராண முக்கியத்துவம்

பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று, காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி “தூப்புல்’ எனவும் “திருத்தண்கா’ எனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான “வேதாந்த தேசிகன்’ இங்கு அவதாரம் செய்ததால் அவர் “தூப்புல் வேதாந்த தேசிகன்’ என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. வேதாந்த தேசிகன்: வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார். இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசி கன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார். அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது “அடைக்கலப்பத்து’ என்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரி யார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என் றும் கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகன் வணங் கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.

நம்பிக்கைகள்

கல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

திருவிழாக்கள்

வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக் கும் விழா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. ஆவணி மாதத்தில் விளக் கொளி பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காண கண்கோடி வேண்டும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top