திருச்சிற்றம்பலம் சீதளா மாரியம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
திருச்சிற்றம்பலம் சீதளா மாரியம்மன் திருக்கோயில்,
திருச்சிற்றம்பலம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609204.
இறைவி:
சீதளா மாரியம்மன்
அறிமுகம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் என்ற சிறிய கிராமத்தில் சீதளா மாரியம்மன் என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளாள். சீர்காழி-கூத்தியாபேட்டை நகரப் பேருந்தில் பயணித்தால் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருசிற்றம்பலத்தை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
இலுப்பை மரங்கள் நிறைந்த இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் மக்கள் விவசாயம் செய்துவந்தனர். ஒரு காலத்தில் இங்கு கோயில்கள் கிடையாது. இதனால் ஊர் மக்கள் நம்மூரில் ஒரு கோயில் இல்லையே என்று வருத்தம் தெரிவித்தது ஊர் நாட்டாண்மை தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது. அதே ஊரில் மாரியம்மன் ஆலயம் கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு ஊர் மக்களின் பங்களிப்புடன் கீற்றுக் கொட்டகையில் ஒரு சிறிய ஆலயம் . அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு சீதளா மாரியம்மன் என்ற திருநாமம் சூட்டப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற்காலத்தில் கல் கட்டிடத்திற்கு கோயில் மாற்றப்பட்டது.
நம்பிக்கைகள்:
உடல் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அம்மன் அபிஷேக தீர்த்தத்தை பெற்று சிறிது அருந்தியும், பாதிக்கப்பட்ட இடத்தில் தெளித்தும் ஓம் சக்தி பராசக்தி என்ற அம்மன் திரு நாமத்தை 108 முறை உச்சரித்து பிரார்த்தனை செய்கின்றனர். இப்படி செய்வதால் உடல்நலம் சீராக பிரச்னைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் குணம் கிட்டும் என நம்பப்படுகிறது. திருமண தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும். கடன் பிரச்சனை விலகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் அம்பாளுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். அம்மனிடம் வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நன்றிக்கடனாக இவ்வாலயத்தில் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கியுள்ள கோயிலின் எதிரே காத்தவராயன் தனிச்சன்னதி உள்ளது. அன்னவாகனத்தில் மாரியம்மன் அமர்ந்திருக்க இருபுறமும் விநாயகர் முருகன் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றால் மகா மண்டபம், பலிபீடம், அர்த்த மண்டபத்தை தொடர்ந்து கருவறையில் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி அற்புதமாகக் காட்சி தருகிறாள் அன்னை.
தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாளன்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படும் இப்படி பஞ்சாங்கம் வாசிப்பது கேட்பது ஆண்டு முழுக்க சகல நலனும் செய்யும் என்பது ஐதீகம் ஊர்மக்கள் தாங்களும் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க வேண்டியும் ஊர் நலன் மற்றும் உலக நலன் வேண்டியும் உலக நாயகி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள் அன்று கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
திருவிழாக்கள்:
ஆடி மாதம் பத்தாம் நாள் உற்சவம் நடைபெறும் நாட்களில் காலை மாலை இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் நாள் தீமிதி உற்சவம் நடைபெறும். தை மாத வெள்ளிக் கிழமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்படும் இரவு திருவீதி உலா நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சிற்றம்பலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி