தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், விழுப்புரம்
முகவரி
தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207
இறைவன்
இறைவன்: கரிவரதராஜ பெருமாள் கோயில் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்
தாதாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்னு கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் இக்கோயிலை கட்டப்பட்டது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று வழங்கப்பட்டாலும் இதன் வரலாற்றுக் காலப் பெயர் ‘ராஜராஜபுரம்’ என்பதாகும். குந்தவை விண்ணகர் ஆழ்வார் கோயில், தற்பொழுது கரிவரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறையின் தெற்குச் சுவரில் பெண் ஒருவரின் சிற்பம் காணப்படுகிறது. இப்பெண் குந்தவையாராக இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.
புராண முக்கியத்துவம்
இக்கோயிலுக்கு குந்தவை பிராட்டியாரால் 900 ஆடுகள் அளிக்கப்பட்டன. அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு கார்த்திகை மாதம் கார்த்திகை விளக்கு எரிக்க அவை மன்றாடிகளின் வசம் அளிக்கப்பட்டது. மேலும் இக்கோயிலுக்கு ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்றோரும் தானம் அளித்துள்ளனர். இராஜராஜனின் இருபத்தியோராவது ஆட்சிக்காலத்தின் ஆரம்பகாலம் குந்தவை வின்னகர், ரவிகுலா மாணிக்கேஸ்வரம் மற்றும் குந்தவை ஜினாலயாம் கோவில்களுக்கு வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் முத்துக்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள். இவை அனைத்தும் இளவரசி பிரந்தகன் குந்தவை பிராட்டியரால் கட்டப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலுக்கு குந்தவை பிராட்டியாரால் 900 ஆடுகள் அளிக்கப்பட்டன. அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு கார்த்திகை மாதம் கார்த்திகை விளக்கு எரிக்க அவை மன்றாடிகளின் வசம் அளிக்கப்பட்டது. மேலும் இக்கோயிலுக்கு ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்றோரும் தானம் அளித்துள்ளனர்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாதாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி