தச்சூர் சிவன் கோயில்
முகவரி
தச்சூர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 303.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர் குறுக்கினை தாண்டி இருபது கிமி சென்றால் எழுத்தூர் அடையலாம். இங்கிருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது தச்சூர் கிராமம். சிறிய ஏரிக்கரையோர கிராமம்,இவ்வூரில் பெருமாள் கோயில், சிவன் கோயில், மற்றும் மாரியம்மன் கோயில். பெருமாளும், மாரியம்மனும் நல்ல நிலையில் இருக்காங்க மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது சிவன் கோயில். ஆம் தச்சூர் ஏரியின் கிழக்கு மூலையில் கரையின் உள்புறம் அமைந்துள்ளது. காலப்போக்கில் கரைகள் வீடுகளாக மாற சிவாலயம் செல்லும் வழி ஒருவரால் அடைக்கப்பட்டு பூசைகள் நின்றுவிட்டன. மழை காலத்தில் ஏரிநீர் கோயிலுக்குள் வந்துவிடுகிறது, கோயில் இப்போது புதர் மண்டி, செடிகொடிகள் வளர்ந்து இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாக மாறியுள்ளது. நாம் செல்லும்போதே இரு வீடுகளின் இடையில் தோளை குறுக்கியவாறு சென்று வந்தோம். கோயில் கருவறை விரிசல் காண ஆரம்பித்துள்ளது. கோயில் பூட்டப்பட்டுள்ளது, உள்ளே இறைவன் இருக்கிறாரா என தெரியவில்லை, கோஷ்ட்ட தெய்வங்களும் நாற்றம் தாங்காமல் எங்கோ சென்றுவிட்டன. உள்ளே விநாயகனும் முருகனும் மட்டும் இறுகி போன முகத்துடன் அமர்ந்துள்ளனர். அம்பிகை தனி சிற்றாலயத்தில் தெற்கு நோக்கி…. நடப்பவற்றினை தடுக்க இயலா ரிஷப தேவர் ஒரு மண்டபத்தின் மீது அமர்ந்துள்ளார். இது ஒரு கால பூசை திட்டத்தில் உள்ள கோயில், பூசை நடக்கிறதா?, கோயில் நிலை என்ன ? இதையெல்லாம் யார் கண்காணிப்பது? சரி ஆக்கிரமித்த அந்த ஒருவர் யார் ங்கிறீங்களா? சாமி கோயில் வழியையே அடைக்கும் அவர் சாமிய விட பெரியசாமியாகத்தானே இருக்க முடியும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எழுத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி