தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப், பஞ்சாப்
முகவரி
தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப், தல்வந்தி சபோ, பட்டிண்டா மாவட்டம், பஞ்சாப் – 151302.
இறைவன்
இறைவன்: குரு கோவிந்த் சிங்
அறிமுகம்
தம்தமா சாகிபு எனும் இவ்வூர், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா மாவட்டத்திலிருந்து 28- கிலோமீட்டர் தென்கிழக்கேயுள்ள பஞ்ச தக்து (ஐந்து இருக்கைகள்) என்னுமிடத்தில் சீக்கிய புனிதத்தலமாக அமைந்துள்ளது. தக்த் சிறீ தர்பார் சாகிபு தம்தமா சாகிபு என விரிவான பெயருடன் அறியப்படும் இது, பஞ்ச தக்து அல்லது ‘சீக்கிய உலகின் அதிகாரத்தின் இருக்கை’ எனப்படும் இருக்கைகளில் ஒன்றுதான் ‘தக்து சிறீ தம்தமா சாகிபு’ எனக்கூறப்படுகிறது. மற்ற நான்கு இருக்கைகளான, அகல் தக்து சாகிபு, தக்து சிறீ கேசகர் சாகிபு, தக்து சிறீ பாட்னா சாகிபு மற்றும் தக்து சிறீ அசூர் சாகிபு போன்ற இருக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புராண முக்கியத்துவம்
கி.பி 1705-ல் சீக்கிய சமய பத்து குருக்களில் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் என்பவர், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிபு (ஆதி கிரந்தம்) எனும் நூலின் முழு பதிப்புகளையும் இவ்விடத்தில் தயாரித்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், முகாலயர்களுடன் நடந்த போருக்குப் பின் இங்கு ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இத்தலத்தின் வளாகத்தினுள் 10 குருத்வாராக்களும், மூன்று புனித நீர்த்தொட்டிகளும் உள்ளன. 1510-ல், சீக்கிய மதத்தின் நிறுவனரும், மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் இங்கு வந்தபோது முதல் தொட்டி உருவாக்கப்பட்டது. ‘குருசார் சரோவர்’, ‘அகால்ஸார் சரோவர்’ என்ற இரண்டாவது மூன்றாவது தொட்டிகளில் நீர் அருந்துவது நோய்களைத் தீர்ப்பதாகச் தொன் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
காலம்
கி.பி 1705
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பட்டிண்டா
அருகிலுள்ள இரயில் நிலையம்
பட்டிண்டா
அருகிலுள்ள விமான நிலையம்
ஸ்ரீ குருராம் தாஸ் ஜி