Friday Nov 15, 2024

டேராடூன் தபகேஸ்வர் குகைக்கோவில், உத்தரகண்ட்

முகவரி :

தபகேஸ்வர் குகைக்கோவில்,

டேராடூன், உத்தரகண்ட் மாநிலம் – 248001.

இறைவன்:

தபகேஸ்வர்

அறிமுகம்:

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது.

 இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. தபக் எனும் சொல்லுக்கு இந்தியில் சொட்டுவது என்று பொருளாகும். இந்த கோயிலைச் சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகள் உள்ளது. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளது.

மகாபாரத புராதாண கதையின் படி துரோணாச்சாரியின் மனைவி கல்யாணிக்கு இந்த குகையில் அஸ்வத்தாமன் பிறந்தார்.   சிவபெருமான் குழந்தைக்கு பாலை கொடுத்தாக புராணம் சொல்கிறது.  பாண்டவர்கள் இந்த சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். துரோணாச்சார்யார் அவரது மனைவியான கல்யாணி மற்றும் மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு இக்கோவிலில் சிற்பம் உள்ளது.

காலம்

6000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

டேராடூன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

டேராடூன்

அருகிலுள்ள விமான நிலையம்

டேராடூன்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top