Monday Nov 25, 2024

ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி

ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், ஜானகிபுரம், மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 305. தொடர்புக்கு திரு ஞானமூர்த்தி-9444349767, திரு ராஜ்குமார்-9585388349

இறைவன்

இறைவன்: பூதலிங்கேஸ்வரர்

அறிமுகம்

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் முன்பு அமைந்திருக்கும் ஜானகிபுரம் கிராமத்தில் புதர்களுக்கு இடையில் காணப்படுகிறது பழமையான ஒரு கற்கோயில். சிதிலமடைந்த கற்கோயிலில் உள்ள ஸ்வாமி சிலைகள் அருகில் அமைக்கப்பட்ட சிறிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ பூதலிங்கேஸ்வரர். அம்பாள் சிலை காணப்படவில்லை. நர்மதை பாணத்தால் ஆன சிவலிங்கம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆறுமுகர், ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ ப்ரம்மா, ஸ்ரீ துர்கை மற்றும் ஜேஷ்டா தேவி போன்ற சிலைகள் இருக்கின்றன. ஆலய திருக்குளமும் அருகில் உள்ளது. ஸ்ரீ சீதா தேவி பூஜித்ததாக சொல்லப்படுகிறது. மதுராந்தகம், மற்றும் செங்கல்பட்டு இங்கிருந்து செல்லும் நகர பேருந்துகள் மூலம் இங்கு வரலாம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஜானகிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top