Sunday Nov 24, 2024

சிவராமபேட்டை சிவராம நங்கை அம்மன் திருக்கோயில், தென்காசி

முகவரி :

அருள்மிகு சிவராம நங்கை அம்மன் திருக்கோயில்,

சிவராமபேட்டை,

தென்காசி மாவட்டம் – 627804.

இறைவி:

சிவராம நங்கை அம்மன்

அறிமுகம்:

 இராமாயணத்துடன் தொடர்புடைய கோயில்கள் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பல உள்ளன. அவற்றுள் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிற்றூரான சிவராமன்பேட்டையும் ஒன்று. தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சிவராமபேட்டை பேருந்து நிறுத்தம் அருகிலேயே இக்கோயில் இருக்கிறது

புராண முக்கியத்துவம் :

       சீதையை கவர்ந்து சென்றவன் ராமன் என்பதே அனுமன் மூலம் அறிந்த ராமபிரான் சீதாதேவியை மீட்க இலங்கைக்கு புறப்பட்டார். வழியில் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சற்று ஓய்வெடுத்து அங்கேயுள்ள பொய்கையில் நீர் அருந்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் தங்கி சிவ வழிபாடு செய்துவிட்டு இலங்கை பயணித்ததாக செவிவழி செய்தி சொல்கிறார்கள். அப்படி ராமர் தங்கி சிவபூஜை செய்த இடமே இப்போது சிவராமபேட்டை என்று அழைக்கப்படும் இடம் என்றும், சிவராமன்பேட்டையை இன்று சிவராமபேட்டை ஆகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. முற்காலத்தில் இங்கு உள்ள வயலை உழுது அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையை கிடைத்த இடத்திலேயே சிறு மேடை அமைத்து பிரதிஷ்டை செய்து எளிமையாக ஒரு கோயில் எழுப்பி சிவராம நங்கை அம்மன் என்று பெயரிட்டு வழிபட்டு வருகிறார்கள். இந்த பெயரில் வேறு எங்கும் அம்மன் கோயில் இருப்பதாக தெரியவில்லை. வித்தியாசமான பெயருடன் சிறப்புடன் இக்கோயில் திகழ்கிறது.

நம்பிக்கைகள்:

இந்த அம்மனை வழிபட்டால் சிவனின் அருளும், ராமன் அருளும். இந்த அம்மன் அருளும் ஒருசேர கிடைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். வேம்பு அம்மனை வணங்கினால் கொடிய நோய்கள் தீரும் என்று நம்புகிறார்கள். வேம்பு அம்மனுக்கு முன்பு இருக்கும் சிறிய கல் தொட்டியில் பால் ஊற்றுகிறார்கள். வேண்டுதலாக ஊற்றப்படும் பாலை ஒரு நாகம் ஒன்று குடித்துவிட்டு செல்கிறதாம்.

சிறப்பு அம்சங்கள்:

கோயிலின் முன்மண்டபத்தில் பலிபீடம் இருக்கிறது. இதனை முகாசுரன் என்றும் அழைக்கிறார்கள். தொடர்ந்து வடக்கு நோக்கிய கருவறையில் சிவராமன் அங்கே எழுந்தருளியுள்ளார். கிராம தேவதையான இவள், இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்குகிறார். பெரிய வேப்ப மரம் இருக்கிறது அதில் அம்மன் முகம் பதிக்கப் பெற்று வேம்பு அம்மனாக வணங்கப்பட்டு வருகிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், சுடலைமாடன், பிரம்மசக்தி அம்மன், கருப்பசாமி மற்றும் பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம்.

திருவிழாக்கள்:

தினமும் ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி கடைசி வெள்ளி, மாதப்பிறப்பு, தினங்களில் பக்தர்கள் அதிகமாக வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர். ஆடி மாதம் கடைசி செவ்வாய் அன்று அம்மனுக்கு காப்பு அலங்காரம் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கொடை விழா நடைபெறுகிறது. வைகாசி மூன்றாவது செவ்வாய்க்கிழமை ஒரு சமுதாயத்தினரும் ஆவணி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை ஒரு சமுதாயத்தினரும் கொடை விழா நடத்துகிறார்கள். திருவிழாவில் உற்சவர் சப்பரத்தில் வீதி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி.

காலம்

500-1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிவராமபேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top