சிதம்பரம் ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
சிதம்பரம் ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர் திருக்கோயில்,
சிதம்பரம் நகரம்,
கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்:
ஸ்ரீ சக்தி பாலநரமுக விநாயகர்
அறிமுகம்:
பார்வதியால் உருவாக்கப்பட்டபோது பிள்ளையாருக்கு மனிதமுகம்தான் பின்னர்தான் சிவபிரானால் மனிதத்தலை கொய்யப்பட்டு யானைத்தலை ஏற்பட்டது. ஆகவே முதன்முதலில் உருவான பிள்ளையார் ஆதிவிநாயகர் அல்லது நரமுக விநாயகர் எனப்பட்டார். வடமொழியில் நரன் என்றால் மனிதன் என்பதாகும். சிதம்பரம் நகரின் தெற்குவீதியில் சோழர் கால கட்டுமானத்துடன் வடக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது, சாலை உயர உயர கோயில் தரைமட்டம் சாலையும் சமமாக வந்து விட்டது கோயிலும் பராமரிப்பின்றி செடிகள் முளைத்து விரிசல் விட்ட நிலையில் புதிய கருங்கல் கோயில் உருவாகி உள்ளது. கோயிலில் வடக்கு நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் எனும் நரமுகவிநாயகர் உள்ளார். நடராஜர் கோவில் மட்டுமே இருந்த போது இவ்விநாயகர் கோவிலும் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமுத கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு வேண்டினால் இவர் அவ்வண்ணமே தந்தருள்வார்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி