சிட்டிலிங்கம்அக்னிபுரீஸ்வரர் (சிட்டிலிங்கேஸ்வரர்)சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சிட்டிலிங்கம் அக்னிபுரீஸ்வரர் (சிட்டிலிங்கேஸ்வரர்) சிவன்கோயில்,
சிட்டிலிங்கம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613705.
இறைவன்:
அக்னிபுரீஸ்வரர் எனும் சிட்டிலிங்கேஸ்வரர்
இறைவி:
மனோன்மணி
அறிமுகம்:
குடவாசலின் தெற்கில் ஓடும் சோழ சூடாமணி ஆற்றை கடந்து நேர் தெற்கில் 6-கிமீ தூரத்தில் உள்ள செல்லூர் வந்து அங்கிருந்து கிழக்கில் திரும்பும் கீரந்தங்குடி சாலையில் ஒரு கிமீ தூரம் வந்து கீரந்தங்குடியின் (கீரன்தேவன்குடி) தெற்கில் மேலஆதிச்சமங்கலம், வழியாக 1 ½ கிமீ தூரத்தில் சிட்டிலிங்கம் கிராமம். இது சித்தர்கள் பலர் வாழும் பூமி, ஏனெனில் அகத்திய காவேரி எனப்படும் வெட்டாறு வடக்கில் இருந்து தெற்காக ஓடி மீண்டும் வடக்கு நோக்கி சுழன்று திரும்பி இப்பிரதேசத்தை தீபகற்பம் போல ஆக்குகிறது. சித்தர்கள் வழிபட்ட பல லிங்கங்கள் இப்பகுதியில் உள்ளதால் இவ்வூர் சித்தர்லிங்கம் எனப்பட்டு இப்போது சிட்டிலிங்கம் ஆகி உள்ளது.
இந்த ஊரை சுற்றி பதினெண் சித்தர்களும் வழிபட்ட 18 லிங்கங்கள் ஆங்காங்கே உள்ளதாக கூறுகின்றனர். ஊரின் தென்புறம் ஒரு பள்ளி கட்டிடத்தின் கிழக்கில் பெரிய திடல் பரப்பில் கிழக்கு நோக்கிய ஒரு சிறிய சிவன்கோயில் ஒன்று இருந்து அதனை உள்வாங்கியுள்ளது ஒரு பெரிய அரசமரம். அதனால் அங்கிருந்த லிங்க மூர்த்தியை எடுத்து ஒரு சிறிய அறை ஒன்றை கட்டி அதனுள் கிழக்கு நோக்கி வைத்துள்ளனர். அருகில் கிழக்கு நோக்கிய ஒரு விநாயகரும் தெற்கு நோக்கிய அம்பிகையும் வைத்துள்ளனர். ஒரு பழமையான அம்பிகை உடைந்து அங்கேயே உள்ளது. இறைவன்- அக்னிபுரீஸ்வரர் எனும் சிட்டிலிங்கேஸ்வரர் இறைவி- மனோன்மணி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிட்டிலிங்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி