சாம்பவத் பாலேஸ்வர் கோவில், உத்தராகண்ட்
முகவரி
சாம்பவத் பாலேஸ்வர் கோவில், NH 125, லோகத் ரேஞ்ச், சம்பவாத், உத்தரகாண்டம் – 262523
இறைவன்
இறைவன்: பாலேஸ்வர்
அறிமுகம்
உத்தரகாண்டம் மாநிலத்தின் சம்பாவாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான பாலேஸ்வர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று பாலேஸ்வர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து ஆசி பெற சிவபெருமானை வழிபடுகின்றனர். பாலேஸ்வர் கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர் பாலேஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார். பாலேஸ்வர் கோவில் வளாகத்தில் வேறு இரண்டு சன்னதிகள் உள்ளன. ஒன்று ரத்னேஷ்வருக்கும் மற்றொன்று சம்பாவதி துர்க்கைக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ரத்னேஷ்வர் மற்றும் சம்பாவதி துர்கா கோவில்களின் வெளிப்புற சுவர்கள் உள்ளூர் தெய்வங்களின் உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. பாலேஸ்வர் கோவிலுக்கு அருகில் “நெளலா” உள்ளது, இது நன்னீர் வளமாகும்.
புராண முக்கியத்துவம்
கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்த் ஆட்சியாளர்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது. அவர்கள் குமாவுன் பிராந்தியத்தின் ஆட்சியாளர்களாக இருந்த இராஜபுத்திர குலத்தினர். பாலேஸ்வர் கோவிலில் உள்ள செதுக்கல்கள் அற்புதமான பிரதிநிதித்துவம் ஆகும். இக்கோயில், மண்டபத்துடன் கூடிய சன்னதியை கொண்டிருக்கிறது. இந்த கோவில்களின் உச்சவரம்பில் அவற்றின் பழங்கால மகிமையையும் கலைத் திறன்களையும் பிரதிபலிக்கும் செதுக்கல்கள் இன்றளவும் உள்ளது. இந்த கோவில்கள் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் சந்த் வம்சத்தின் காலத்தில் அற்புதமான செதுக்கல்கள்களுக்கும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. கோவிலின் கட்டிடக்கலை தென்னிந்திய பாணியை அடிப்படையாகக் கொண்டது. இது தென்னிந்தியாவின் கோவில்களில் உள்ளதை போல் ஒத்திருக்கிறது. கோவிலில் மண்டபமும் சில சிற்ப வேலைப்பாடுகளுடன் கருவறையும் இருந்தது. தற்பொது சிற்பங்கள் உள்ளது, ஆனால் மண்டபம் அழிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி கோவிலின் மிக முக்கியமான திருவிழா.
காலம்
10 – 12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாம்பவத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தனக்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பந்த் நகர்