சாத்தனூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சாத்தனூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில்,
சாத்தனூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
திரு. கண்ணன் 76396 58133
இறைவன்:
காளஹஸ்தீஸ்வரர்
இறைவி:
ஞானாம்பிகை
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் வெண்ணாற்று மேல் பாலம் ஒன்றுள்ளது. அந்த பாலத்தை தாண்டினால் வெண்ணாற்றின் தென் கரையில் சாத்தனூர் அமைந்துள்ளது. சாத்தனூரில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. பாலத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையில் பெரிய குளத்தின் கரையில் ஒரு சிவன்கோயில் உள்ளது. மிகப்பெரிய அளவிலான குளத்தின் வட கரையில் இக்கோயில் உள்ளது. கோயிலை ஒட்டி படித்துறைகளும் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. ஆனால் இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டவர். முகப்பு மண்டபம் வாயிலும் கிழக்கில் உள்ளது. மண்டப வாயில் வழி உள்ளே சென்றால் நேரே தியாகராஜருக்கான சன்னதி. தற்போது தியாகராஜர் அங்கில்லை. சன்னதி மட்டுமே உள்ளது. நுழைவாயில் இடதுபுறம் கிழக்கு நோக்கிய கன்னிமூலை கணபதி உள்ளார்.
வலதுபுறம் திரும்பினால் மேற்கு நோக்கிய இறைவனின் சன்னதியை அடையலாம். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார் இதில் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி இணைகிறது. இறைவன் –காளஹஸ்தீஸ்வரர் இறைவி ஞானாம்பிகை இறைவனின். கருவறை கோட்டங்களாக தக்ஷணமூர்த்தி மட்டும் உள்ளார். இறைவனின் நேர் எதிரில் ஒரு கதவும் அதன் வெளியில் நந்தி ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார். வெளி பிரகாரம் சுற்றி வரும்போது மேற்கு பக்கம் நந்தி மண்டபம் காணலாம் வடமேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். வடகிழக்கில் ஒரு தீர்த்த கிணறும், அருகில் மேற்கு நோக்கிய பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். காலை மாலை என பூஜை நடக்கிறது எனினும் சிறப்பு நாட்களில் மட்டுமே மக்கள் வரத்து என்பது உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி