சரவனபெல கோலா அக்கனா சமண பசாடி, கர்நாடகா
முகவரி
சரவனபெல கோலா அக்கனா சமண பசாடி, எஸ்.எச் 8, சரவனபெல கோலா (கிராமப்புறம்), ஹாசன் மாவட்டம், கர்நாடகா – 573135.
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
அக்கனா பசாடி கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சரவனபெலா கோலாவில் அமைந்துள்ளது. ஹொய்சாலா பேரரசின் மன்னர் இரண்டாம் வீரா பல்லாலா ஆட்சியின் போது பொ.சா. 1181-ல் கட்டப்பட்ட சமண கோயில் அக்கனா பசாடி. ஹொய்சலா மன்னரின் பிராமண மந்திரி சந்திரமெளலியின் மனைவி ஆச்சியக்கா (அச்சலா தேவி என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவரால் இந்த பசாதி கட்டப்பட்டது. கோயிலின் முக்கிய தெய்வம் இருபத்தி மூன்றாவது சமண தீர்த்தங்கர் பார்சுவநாதர். இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
கலை வரலாற்றாசிரியர் ஆடம் ஹார்டியின் கூற்றுப்படி, பசாடி என்பது முக மண்டபம் கொண்ட கட்டுமானத்துடன் கூடிய எளிய ஒற்றை ஆலயம் ஆகும். தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் (ஏழு தலை பாம்பு விதானத்தின் கீழ்) நிற்கும் உருவத்தை வைத்திருக்கும் கருவறை மண்டபத்துடன் அமைவது ஆகும். கிழக்கு நோக்கிய பிரகாரத்துடன் அமைந்துள்ளது கோயில். அதே நேரத்தில் நுழைவாயில் தெற்கிலிருந்து உள்ளது. சமண பசாதியின் வெளிப்புற சுவர்கள் வெறுமையாக உள்ளது. சன்னதிக்கு மேலே உள்ள கோபுரம் வெறுமையாக உள்ளது. இருப்பினும், கிழக்குப் பக்கத்தில் சிற்பக்குழு உள்ளது, இது துறவி தனது உதவியாளர்களுடன் உள்ளதுப்போல் இருபுறமும் சித்தரிக்கிறது மற்றும் அவரது தலைக்கு மேல் ஒரு கீர்த்திமுகா உள்ளது.
காலம்
1181 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சரவனபெல கோலா
அருகிலுள்ள இரயில் நிலையம்
சரவனபெல கோலா
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்