சமுத்தினார்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
சமுத்தினார்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், சமுத்தினார்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 602
இறைவன்
இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி – சிவகாமசுந்தரி
அறிமுகம்
கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் இருந்து திருப்பந்துறை செல்லும் சாலையில் அரைகிமி தூரத்தில் உள்ளதுஇந்த சமுத்தினார்குடி. தற்போது நாச்சியார்கோயிலும், சமுத்தினார்குடியும் ஒரே ஊர் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். சமந்தனார்குடி எனவும் வழங்கப்படுகிறது. இரண்டு மூன்று தெருக்களே உள்ள ஊர் தான் இது. இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன் கோயில் ஒன்றுள்ளது. கோயில் எதிரில் ஒரு குளம் ஒன்றுள்ளது, கிழக்கு தெற்கு என இரு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் பகுதி ஆக்கிரமிப்பாக உள்ளது. கிழக்கு வாயிலில் ஒரு உடைந்த நந்தி உள்ளது. பிரதான வாயில் தென்புறமே என ஆகிவிட்டது, அருகில் அய்யனார் கோயில் ஒன்றும் உள்ளது. தென்புறம் வழி உள்ளே சென்றால் தென்மேற்கில் இருக்கும் விநாயகர் சிற்றாலயம் கண்டு வணங்கலாம். குளத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் கோயில் சுபிட்சமடையும்.
புராண முக்கியத்துவம்
இறைவன் கிழக்கும், இறைவி தெற்கும் நோக்கிய சன்னதி கொண்டுள்ளனர். இரு சன்னதிகளையும் கருங்கல் தூண்கள் தாங்கும் முகப்பு மண்டபம் இணைக்கிறது. நந்தி இந்த மண்டபத்தின் வெளியில் இருந்தவாறே இறைவனை நந்தி அமர்ந்திருக்கிறார். நந்துதல் என்றால் முந்தி இருத்தல் என பொருள் அதனால் தான் இறைவன் முன்னர் இருக்கும் ரிஷபம் நந்தி எனப்படுகிறது. இறைவன் சிறிய லிங்கமாக உள்ளார் இறைவியும் அதற்க்கு ஏற்ற அளவுடையவராக உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகரும், அடுத்து முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்களும் உள்ளன. கோமுகத்தடியில் சண்டேசரும் உள்ளனர். சண்டேசர் சன்னதி பின்புறம் பெரிய வில்வமரமும், அதனடியில் ஒரு நாகரும் உள்ளனர். வடகிழக்கில் நவகிரக சன்னதி உள்ளது. இதில் சிறப்பாக நவகிரகங்கள் அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். இது போன்ற அமைப்பில் உள்ளது அரிதானது. மனைவியருடன் ஏகாந்தமாக இருக்கும் இந்த நவகிரகங்களை வணங்கினால் உடனடியாக காரிய சித்தி கிடைக்கும். தோஷ நிவர்த்தியும் உடனடியாக கிடைக்கும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாச்சியார்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி