சந்த்பூர் பெல்மோரி கோவில், உத்தரபிரதேசம்
முகவரி
சந்த்பூர் பெல்மோரி கோவில், சந்த்பூர், ஜஹஜ்பூர், லலித்பூர் உத்தரபிரதேசம் – 284403
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சந்த்பூர் கோவில்களின் குழுக்கள் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பண்டைய சந்தேலா கால கோவில்களின் குழுக்கள் ஆகும். கோயில்கள் முக்கியமாக சிவன், விஷ்ணு மற்றும் சமண தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் விரிவான தொல்பொருள் எச்சங்களுக்கு சந்த்பூர் பெயர் பெற்றது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் கோவில்களின் குழு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
இந்த கோவில் குழுவில் இரண்டு கோவில்கள் உள்ளன (பெரியது மற்றும் சிறியது). இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிலைகள் இல்லை. பெரிய கோவில் கருவறை மற்றும் மண்டபத்தைக் கொண்டுள்ளது. கருவறை முற்றிலும் இழந்துவிட்டது. கருவறை மற்றும் மண்டபத்தின் பீடம் உள்ளது. சிறிய கோவில் கருவறை மற்றும் நுழைவு மண்டபத்தை கொண்டுள்ளது. கருவறை மீது உள்ள ஷிகராம் பாழடைந்த நிலையில் உள்ளது. உப ஆலயங்களின் எச்சங்களையும் கோவில் வளாகத்தில் காணலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜக்ஹலூன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜக்ஹலூன்
அருகிலுள்ள விமான நிலையம்
லலித்பூர்