Saturday Nov 16, 2024

கோழிக்கோடு லோகநார்காவு துர்கா தேவி திருக்கோயில், கேரளா

முகவரி

கோழிக்கோடு லோகநார்காவு துர்கா தேவி திருக்கோயில், கவில் சாலை, வில்லைப்பள்ளி, வடகரை, கோழிக்கோடு மாவட்டம், கேரள மாநிலம் – 673104.

இறைவன்

இறைவி: துர்கா தேவி

அறிமுகம்

லோகநார்காவு கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், வடக்கு மலபார் பகுதியின், கோழிக்கோடு மாவட்டத்தில் வட்டகரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள மெமுண்டாவில் உள்ள பழங்கால கோயில் ஆகும். லோகநார்காவு என்பது லோகமலாயாருகாவு என்ற சொல்லின் குறுகிய வடிவம், அதாவது மலா (மலை), ஆரு (ஆறு), காவு (தோப்பு) ஆகிய சொற்கள் இணைந்து உருவான சொல்லாகும். கோயிலுக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையமானது 5 கி.மீ தொலைவில் வடகரையில் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் 54 கி.மீ. தொலைவில் உள்ள கண்ணூர் விமான நிலையம் ஆகும். பூரம் திருவிழா இங்கே முக்கியமான திருவிழா ஆகும். இது மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுகிறது. ஒரு வாரம் முழுவதும் நடைபெறும் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி ஆராட்டுடன் முடிவடைகிறது. துர்க்கைக்காக கட்டபட்ட இந்த கோவிலுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் கேரளத்தின் புகழ்பெற்ற தற்காப்பு வீராரான தச்சோலி ஓத்தேனன் ஒவ்வொரு நாளும் இங்கு வழிபடுவார் எனப்படுகிறது.

நம்பிக்கைகள்

களரிப்பயிற்றில் . புகழ்பெற்ற வீரரான தச்சோலி ஓத்தேனன் லோகநார்காவு கோவிலிலுடன் கொண்ட தொடர்பு காரணமாக இன்றும் கூட, அனைத்து கலரிபயிற்று கலைஞர்களும் தங்கள் அரங்கேற்றதுக்கு முன்பு தெய்வத்தின் ஆசியை வேண்டி வருகின்றனர்.

திருவிழாக்கள்

கோயிலில் முப்பது நாட்கள் மலையாள மாதமான விருச்சிகத்தில் (நவம்பர்-டிசம்பர்) மண்டல உற்சவம் நடக்கிறது. மலையாள மாதமான மீனத்தில் (மார்ச்-ஏப்ரல்) லோகநார்காவு பகவதி கோவிலில் ஆண்டு விழாவான பூரம் விழா நடக்கிறது. பண்டிகைகளின் போது பூரக்களி என்ற விசித்திரமான நாட்டுப்புற நடனம் நடத்ததபடும் ஒரே கோயில் இதுவாகும் . இந்த நடனம், தற்காப்புக் கலையை ஒத்திருக்கிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மெமுண்டா

அருகிலுள்ள இரயில் நிலையம்

வடகரை

அருகிலுள்ள விமான நிலையம்

கன்னூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top