கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், கோட்டப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609 601
இறைவன்
இறைவன் : சிவலோகநாதர் இறைவி : சிவகாமி
அறிமுகம்
பூந்தோட்டம்- காரைக்கால் சாலையில் அம்பல் தாண்டியதும் பொரக்குடி- அகளங்கன் சாலையில் மூன்று கிமி தூரம் பயணித்தால் இந்த கோட்டப்பாடி கிராமத்தினை அடையலாம். இங்கு ஊருக்குள் நுழையும் சாலையில் திரும்பி சற்று வலது புறம் நோக்கினால் கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று சிதிலமடைந்து இருப்பதை காணலாம். கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளதால் சிலைகள் தனியாக ஒரு தகர கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. இறைவன் சிவலோகநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டும், இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டும் உள்ளனர். இறைவன் கருவறையின் பிரகாரத்தில் விநாயகர், முருகன் ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. கோயில் மதில் சுவர் முற்றிலும் இடிந்து காணாமலேயே போய்விட்டன. கோயிலின் நேர் எதிரில் ஒரு பெரிய குளம் ஒன்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தைந்தாம் ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று சிவலோகநாதர் கருவறை நுழைவாயில் இடப்புற சுவரில் உள்ளது அதில் நகரத்தார் இக்கோயிலுக்கு நிலம் விற்று கொடுத்த செய்தியை கூறுவதாக உள்ளது. இறைவன் சிவலோகநாதர் இறைவி சிவகாமி என்று அழைக்கப்படுகிறார்கள். இறைவன் கருவறை எதிரில் நந்தி மண்டபம் உள்ளது, அதன் தரை பகுதியில் ஒரு கல்வெட்டு ஒன்று தேய்ந்து காணப்படுகிறது, அதன் எழுத்துக்கள் சில நூறாண்டுகளில் எழுதப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது. மண்டபத்தினை ஒட்டி தென்முகன் சிலை சிதைவடைந்த நிலையில்… எத்தனையோ பெயர்ச்சிகளை கண்ட குரு இன்று இங்கு பெயர்ச்சி ஆவோம் என ஒருபோதும் எண்ணியிருக்கமாட்டார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோட்டப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி