கோடுகிழி முக்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
கோடுகிழி முக்தீஸ்வரர் சிவன்கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் -614302.
இறைவன்
இறைவன்: முக்தீஸ்வரர்
அறிமுகம்
திருக்கருகாவூர் – சுரக்காயூர் சாலையில் வெண்ணாறு வடக்கு கரையில் சென்றால் ஒன்பதுவேலியை அடுத்து உள்ளது இந்த கோடுகிழி கிராம பேருந்து நிறுத்தம். இந்த நிறுத்தம் அருகில் ஆற்றின் உட்கரையில் செங்கல் காளவாய்கள் உள்ளன. ராமசீதா புராணத்தில் வரும் மாரீச மானை பிடிக்கும் படலத்தில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமணன் பர்ணசாலையினை தாண்டி சீதை வரக்கூடாது என ஒரு கோடு கிழிக்கிறார். அந்த இடம் தான் இந்த கோடுகிழி. அதனை ஒட்டி உள்ளது இந்த சிதைவடைந்த கோயில் உள்ளே ஓர் லிங்கமூர்த்தி. பாசி பிடித்து “பச்சை மாமலைபோல் மேனியனாக” கருவறை காட்சியளிக்கிறது. பலரும் பலவிதமாக முயற்சித்ததில் இறைவன் முக்தீஸ்வரர் என பெயர் கொண்டு தனி சிமென்ட் ஸ்லாப் கொட்டகைக்கு மாறியுள்ளார், அடியார் பூஜை நடக்கிறது நித்தம். விரைவில் நிலை மாறும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோடுகிழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி