கொல்லம் மறையிக்கோடு ஸ்ரீ இடியப்பன் சேத்திரம் , கேரளா
முகவரி
மறையிக்கோடு ஸ்ரீ இடியப்பன் சேத்திரம் , கொட்டாரக்கரை, கொல்லம் மாவட்டம், கேரள மாநிலம் – 691531
இறைவன்
இறைவன்: சிவன் மற்றும் விஷ்ணு இறைவி: பார்வதி தேவி
அறிமுகம்
மறையிக்கோடு ஸ்ரீ இடியப்பன் சேத்திரம் என்பது தென்னிந்தியாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்தக் கோவிலிலில் இந்து அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கோயில் கொட்டாரக்கராவிலிருந்து 5 கிமீ தொலைவில் கரிக்கோமில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இக்கோயிலில் சிவன் (சிவலிங்கம்), பார்வதி தேவி, விஷ்ணு ஆகியோர் முதன்மை தெய்வங்களாக உள்ளனர். கணபதி, நாகராசன் மற்றும் நாகயக்சி, பிரம்மாராக்ஷசன், யக்ஷி ஆகியோர் கோவிலின் உப தெய்வங்கள் ஆவார். இங்கே இரு கோயில்கள் உள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர். ஒன்று சிவன் கோயில் இன்னொன்று விஷ்ணு கோயில். சிவன் கோயில் இரண்டு தனி சன்னதிகளுடன் உள்ளது, ஒன்று சிவனுக்கானது,அது கிழக்கு பார்த்தும், மற்றொன்று பார்வதி தேவிக்கானது மேற்குதிசையிலும் உள்ளது. விஷ்ணு கோயில் ஒன்று கிழக்கு மண்டபத்தில் தனிச் சந்நிதியாக கிழக்கு பார்த்து உள்ளது. இங்கு பிள்ளையாருக்கு தனிச் சந்நிதி உள்ளது. வாஸ்துவின்படி, கோயில் வளாகத்தில் சிவன் கோயிலானது “கன்னி மூலை”யில் (தென்-மேற்கு மூலை) அமைந்துள்ளது. ஸ்ரீ நாகராஜர் மற்றும் நாகயக்ஷி மற்றும் பிரம்மராக்ஷி ஆகியோர், கணேசரின் “கன்னி மூலையில்” பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றனர். விஷ்ணுவின் சன்னதிக்கு அருகிலுள்ள மரத்தின் அடியில் யக்ஷி இடம்பெற்றுள்ளார்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொட்டாரக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொட்டாரக்கரை
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்