கொண்டல் முருகன் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கொண்டல் முருகன் கோயில்,
கொண்டல், சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609116.
இறைவன்:
முருகன்
அறிமுகம்:
முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் ‘கொண்டல் வண்ணன் குடி’ என்று இஃது பெயர் பெற்றது. ‘கொண்டல் வண்ணன் குடி’ என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் – வள்ளுவக்குடி என்றானது. அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம்; பக்கத்தில் தாரகபரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பிரதான மூர்த்தியாக முருகன் உள்ளார். அவரின் இடப்புறம் சிவனார், பார்வதியுடன் உள்ளார். சிறிய கோயில்; இடும்பன் சன்னதி உள்ளது தென்மேற்கில், தற்போது தான் குடமுழுக்கு நடைபெற்று கழிகள் பிரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தை பூசம் இங்கு மிக சிறப்பு.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொண்டல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி