கொக்கூர் கைலாசநாதர் சிவன்கோயில் மயிலாடுதுறை
முகவரி
கொக்கூர் கைலாசநாதர் சிவன்கோயில், கொக்கூர் கிராமம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி : திரிபுரசுந்தரி
அறிமுகம்
குத்தாலத்தில் இருந்து நேர் தெற்கில் ரயிலடி கடந்து நான்கு கிமி சென்றால் கொக்கூர் அடையலாம். சிறிய கிராமம், இங்கு அய்யனார், மாரியம்மன், பெருமாள் சிவன் கோயில்கள் உள்ளன. சிவாலயம் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, திரிபுரசுந்தரி உடனாகிய கைலாசநாதர் கோயில் 60 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்ததால் மிகவும் சிதிலமடைந்துள்ளது. கோயிலில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள் இக்கோயிலின் தொன்மையை பறைசாற்றுகின்றன. தமிழகத்திலேயே காஞ்சிபுரத்தை தவிர இக்கோயிலில்தான் திரிபுரசுந்தரி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பே கோயில் திறக்கப்பட்டு தற்போது ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. சிவன் கோயில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. விநாயகர் சிற்றாலயம் காணவில்லை, முருகன் கோயில் இடிபாடுகள் மட்டும் எச்சம். சண்டேஸ்வரர் சன்னதி உள்ளது. நந்தி மண்டபம் உள்ளது. இங்கு சண்டேஸ்வரர், சண்டேஸ்வரி இருவரும் ஒரே சன்னதியில் இருப்பது சிறப்பு. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி