கெரசந்தே ஸ்ரீ சம்புலிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா
முகவரி
கெரசந்தே ஸ்ரீ சம்புலிங்கேஸ்வரர் கோவில், கெரசாந்தே, கர்நாடகா – 577548
இறைவன்
இறைவன்: ஸ்ரீ சம்புலிங்கேஸ்வரர்
அறிமுகம்
இந்த கோவில் கர்நாடகா மாநிலம், கெரசந்தே கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சம்புலிங்கேஸ்வரர் கோவில், தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தகோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இந்த ஆலயம் அந்தராளத்துடன் 3 கர்ப்பகிரகங்களையும், தூண்கள் கொண்ட முன் மண்டபத்துடன் நவரங்கத்தையும் கொண்டுள்ளது. சம்புலிங்கேஸ்வரர் கோவில், ஒரு திரிகூடக்கோவில். இந்த கோவிலின் நுழைவாயில் அதிகமாக வளர்ந்த புதர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது வெளவால்களின் இருப்பிடமாக உள்ளது. கோவிலில் சிலை இல்லை. மிக நீண்ட முகமண்டபத்துடன் ஜனார்த்தனனுக்கு (கிருஷ்ண பகவான்) அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவில் உள்ளது. இந்த கோவில் சம்புலிங்கேஸ்வரர் கோவிலைப்போலுள்ளது. கோவில் முற்றிலும் இடிந்து கிடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கெரசாந்தே
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேவனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹாசன்