Wednesday Dec 18, 2024

கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோயில், கூந்தலூர், கூந்தலூர் அஞ்சல் வழி எரவாஞ்சேரி, குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 609501

இறைவன்

இறைவன்: ஜம்புகாரண்யேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி

அறிமுகம்

கும்பகோணம் – நாச்சியார்கோ வி ல் – பூந்தோட்டம் சாலையில் எரவாசேரிக்கு அருகில் சாலை ஓரத்திலேயே கூந்தலூர் ஜம்புகாரண்யேவரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமா ர் 20 கி.மீ. தொலைவு. கருவிலிகொட்டிட்டை என்ற பாடல் பெற்ற தலம் இங்கிருந்து 2 கி .மீ. தொலைவில் உள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் இழக்கு தோக்கியும், அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு தோக்கியும் அருள் புரிகின்றனர். ஜம்புகாரண்யேஸ்வரர் நீண்டு உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார். கருவறை பிராகாரம் வலம் வரும்போது கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை அம்மன் ஆகியோரைக் காணலாம். சண்டிகேஸ்ரருக்கும் தனி சந்நிதி உள்ளது., பல்லவர் கால 16 பட்டை தாரா லிங்கத்தை பாலசுப்ரமணியர் சந்நிதி அருகே காணலாம். ஆலயத்தின் தீர்த்தங்களாக சீதா தீர்த்தமும், குமார தீர்த்தமும் உள்ளன. சனி செவ்வாய் கிரகப் பாதிப்புகளுக்கு இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

பண்டைய காலத்தில் நாவல் மரங்கள் அடர்ந்து இருந்த வனத்திடையே அமைந்த திருத்தலமாகியதால் ஆலய இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரண்யேஸ்வரர் என ஈசன் அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. “ஜம்பு” என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப் பொருள்படும். மேலும், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்தத்தில் சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் என வழங்கப்படுகிறது. அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கூந்தலூர் ஒரு தேவார வைப்புத் தலமாக இருந்தாலும் இத்தலம் கூந்தலூர் முருகன் கோவில் என்று தான் இப்பகுதி மக்களால் அறியப்படுகிறது. ரோமரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமான் அருளைப் பெற்றார். அவ்வாறு அவர் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெற தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் அளித்து வந்தார். ஒரு சமயம் சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன் வருவது நின்று விட்டது. ரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட திருக்கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த சிவ சித்தரான ரோமரிஷி சித்தரை, விநாயகரும், முருகனும் விரைந்து வந்து அவரை கோவிலுக்கு உள்ளே வர விடாமல் தடுத்தனர். ரோமரிஷி சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்திற்கு வெளியே காட்டி பறத்தூய்மையை விட அகத்தூய்மையே இன்றியமையாதது என மற்றவர்க்கும் உணர்த்தி ரோமரிஷிக்கு அருள் புரிந்தார். என தல வரலாறு கூறுகிறது.

சிறப்பு அம்சங்கள்

திருப்புகழ் தலம்: முருகப்பெருமான் ரோமரிஷி முனிவரைத் தடுக்க வந்ததால் அவரின் சந்நிதி கோவிலின் முன் புறம் அமைந்துள்ளது. இத்தல முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடாப்பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. முருகர் ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மயிலின் முகம் வலப்பகம் உள்ளது. சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு உள்ள மயில் இது என்பர். இது தேவ மயில் என்றும் கூறுவர்.

காலம்

1600 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூந்தலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top