குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில், திருச்சி
முகவரி :
குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில்,
குழுமணி,
திருச்சி மாவட்டம் – 639103.
இறைவி:
ஊரடச்சி அம்மன்
அறிமுகம்:
திருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். இந்த ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில். ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கிறது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
ஊரை அடைத்து காவல் செய்கின்ற அம்மன் என்றும், தீய சக்திகளை அழித்து மக்களை காப்பாற்றும் தெய்வமாகவும் இருப்பதால் இத்தெய்வத்தின் முடியில் தீ ஜுவாலை வீசுவதாகவும், அதன் காலடியில் மகிஷாசுரன் என்னும் அரக்கனைக்கொன்று உலகத்தை காப்பாற்றிய பராசக்தியின் வடிவம் இது என்றும் மக்கள் கூறுகிறார்கள். அடை காக்கும் கோழி தன் முட்டை களையும், குஞ்சுகளையும் எப்படி காக்குமோ, அதுபோல் இந்த அம்மன் ஊரை அடை காக்கின்ற காரணத்தினால் ஊரடச்சியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறாள் இந்த ஊரடச்சி அம்மன்.
நம்பிக்கைகள்:
குழந்தைப் பேறு இல்லாதப் பெண்கள் ஆறு பௌர்ணமி நாட்களில் அன்னையின் சந்நதிக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட, அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது என்கின்றனர் பக்தர்கள். பின் அவர்கள் தாய்மை அடைந்ததும் மூன்றாவது மாதம் அன்னைக்கு வளைகாப்பு இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.
திருவிழாக்கள்:
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குழுமணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி