குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், உத்தரகாண்டம்
முகவரி
குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், சமோலி மாவட்டம் உத்தராகண்டம் – 249401.
இறைவன்
இறைவன்: குரு கோவிந்த் சிங்
அறிமுகம்
ஹேமகுண்டம் சீக்கிய வழிபாட்டுத் தலமாகும். இது இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப் என்று அழைக்கின்றனர். இது பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கை வழிபடும் இடமாகும். இவர் இயற்றிய தசம் கிரந்த் என்ற நூலிலும் இந்த இடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த இடத்தில் பனிப்படர்ந்த ஏரியும், இதைச் சுற்றி ஏழு மலைக்குன்றுகளும் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத் தலம் இமயமலையில், 4632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தில்லியில் இருந்து வருவோர், அரித்துவார் வரை தொடர்வண்டியில் வந்து, பின்னர் அங்கிருந்து ரிசிகேசு வழியாக கோவிந்த்கட் என்ற இடைத்தை பேருந்து மூலமாக வந்தடையலாம். ஹேம்குண்ட் என்ற சொல், ஹேம, குண்ட ஆகிய சமஸ்கிருதச் சொற்களால் ஆனது. ஹேம என்ற சொல்லுக்கு பனி என்றும், குண்ட என்ற சொல்லுக்கு பாத்திரம் என்றும் பொருள். தசம் கிரந்த் என்ற நூல், இவ்விடத்தில் குரு நாட்டு மன்னர் பாண்டு யோகக் கலை பயின்றதாக குறிப்பிடுகிறது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவிந்த்கட்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹரித்வார்
அருகிலுள்ள விமான நிலையம்
டேராடூன்