குன்னுவராயன்கோட்டை சிவன்கோயில், திண்டுக்கல்
முகவரி
குன்னுவராயன் கோட்டை சிவன்கோயில், குன்னுவாரன் கோட்டை, நிலக்கோட்டை வட்டம், திண்டுக்கல் மாவட்டம் – 624208
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
குன்னுவராயன்கோட்டை கோயில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவராயன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குன்று அரண் கோட்டை, குன்றுவராயன் கோட்டையாகி காலத்தின் போக்கில் மருவி தற்போது குன்னுவராயன்கோட்டை என்றழைக்கப்படுகிறது. சிவன் கோவிலை காணலாம். இக்கோவிலில் கல்வெட்டுகள் கோவிலின் வடப்பக்க அதிட்டானத்தில் உள்ளது. ஏனைய ஒருசில கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இதில் உள்ள கல்வெட்டுகளின் தகவல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வணிகப்பெருவழி, பதினெண் விஷயத்தார் என்னும் வணிக குழுவினர், சுங்க வரி வசூல் பற்றிய தகவல்களை கொண்டதாக உள்ளது இங்க காணப்படுற கல்வெட்டுகள்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னுவராயன்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாடிப்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை