குன்னத்தூர் ஸ்ரீஆதிநாதர் சமணக்கோயில், திருவண்ணாமலை
முகவரி :
குன்னத்தூர் ஸ்ரீஆதிநாதர் சமணக்கோயில்,
குன்னத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம் – 606803.
தொடர்புக்கு: ஸ்ரீதேவதா ஸ்- +91 9566768181
இறைவன்:
ஸ்ரீஆதிநாதர்
அறிமுகம்:
குன்னத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் போளுர் நகரத்திற்கு அருகில் ஆரணி சாலையில் 2 கி .மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் ஆகும். முற்காலத்தில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் ராஜகம்பீரநல்லூர் எனவும், பின்னர் குன்றத்தூர், குன்னத்தூர் எனவும் மருவி வந்துள்ளது. இரண்டாம் தேவராய மன்னர் காலத்தில், கி .பி .1441ல், அங்கு வசித்து வந்த சமணர்களால் சிறிய ஜிநாலயம் கட்டப்பட்டிருந்தது. அவ்வாலயத்திற்கு ஆர்காடு நவாப் மன்னரிடமிருந்து மான்யங்கள் கிடைத்துள்ளதற்கான கல்வெட்டு உள்ளது. அதன் பின்னர் முழுவதுமாக பிரித்து கட்டியுள்ளனர். தற்போது முழுவதும் முடிக்கப்படாத நிலையிலும் அழகாக காட்சித் தருகிறது. பிரதிஷ்டை செய்ய வேண்டிய பிம்பங்களும் அறையில் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
ஸ்ரீஆதிநாதர் ஜிநாலய மூலவராக வேதிகையில் நிறுவப்பட்டுள்ளார். கற்பலகையில், சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டுள்ள அச்சிலையில் லாஞ்சனம் இன்றி உள்ளதால் மிகவும் பழமை வாய்ந்ததாக தெரிகிறது. அதன் மேற்புறம் ஏகதள விமானம் நாற்திசைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடனும், மூலையில் சிம்ம பொம்மைகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய சிகரத்தில் அழகிய கலசமும் வைக்கப்பட்டு காட்சி தருகிறது. அடுத்து அந்தராளமும், தற்காலத்தில் கட்டப்பட்ட வழி பாட்டு மண்டபமும் அதில் சிறிய பலி பீடமும் உள்ளன. அனைத்தும் வாயில் கதவுகள், சுற்றுச் சுவருடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜிநாலயங்களிலும் நடைபெறும் பூஜைகளும், பண்டிகைகளும் செவ்வனே நடைபெறுகிறது. அனைத்து விசேஷ காலங்களிலும் அருகில் உள்ள இந்துக்களும் கலந்து கொள்வது மேலும் சிறப்பாகும்.
காலம்
கி .பி .1441 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை, பாண்டிச்சேரி