கீழமனை வைத்தியநாதர் திருக்கோயில், காரைக்கால்
முகவரி :
கீழமனை வைத்தியநாதர் திருக்கோயில்,
கீழமனை, நிரவி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609604.
இறைவன்:
வைத்தியநாதர்
இறைவி:
தையல்நாயகி
அறிமுகம்:
காரைக்கால் அடுத்து ஓடும் அரசலாற்றுக்கும், திருமலைராஜன் ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதியே இந்த கார்கோடகபுரி. காரைக்கால் அரசலாற்றின் தென் கரையில் 5 கிமீ தூரம் பயணித்தால் காக்கமொழி அடையலாம். இந்த காக்கமொழிக்கு அடுத்துள்ள உள்ள ஊர் தான் இந்த கீழமனை. இவ்வூரில் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் கிடந்த இக்கோயில் தற்போது புது பொலிவுடன் விளங்குகிறது. வைத்தீஸ்வரன் கோயிலை போலவே இங்கும் இறைவனுக்கு வைத்தியநாதர் என்றும் இறைவிக்கு தையல்நாயகி என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. திருமலைராயன் காலத்தில்கட்டப்பட்ட கோயில் சிதைந்து போனதால் முற்றிலும் புதியதாக கோயில் எழும்பியுள்ளது.
மேற்கு நோக்கிய திருக்கோயில், இறைவன் சற்று பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார் அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார் இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது அதில் நந்தி பலிபீடம் உள்ளது. அதன் தென்மேற்கிலும் வடமேற்கிலும் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறை வாயிலில் அழகிய துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோட்டத்தில் மூர்த்திகள் இல்லை. தனித்த ஒரு சன்னதியாக லக்ஷ்மிநாராயணர் உள்ளார். சண்டேசர் சன்னதி தனித்து அழகாக உள்ளது அதன்மேல் சண்டேசனுக்கு மாலை சூட்டும் இறைவனின் சுதை அழகு. கருவறை சுவரெங்கும் ஸ்தபதியின் கைவண்ணம் அற்புதமாக துலங்குகிறது. துர்க்கையின் ஓவியம், தழுவக்குழைந்த ஈசன், தக்ஷணமூர்த்தி ஓவியங்கள் அற்புதமாக உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழமனை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி