கீழகரம் ஆதிபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
கீழகரம் ஆதிபுரீஸ்வரர் சிவன்கோயில், கீழகரம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: ஆதிபுரீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி
அறிமுகம்
கீழகரம் நன்னிலத்தின் மேற்கில் மூன்று கிமி தூரத்தில் முடிகொண்டான் ஆற்றின் தென்கரையோரம் உள்ளது. ஊருக்குள் ஜனநாதன் வாய்க்கால் ஓடுகிறது, கீழையகம், ஜனநாதன், அத்திப்பாக்கம், கீழகரம், சுக்கிரவார கட்டளை என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது கீழகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. கோயில் கிழக்கு நோக்கியது, முகப்பில் மதில் சுவற்றின் அலங்கார வளைவு உள்ளது. பெரிய நந்தவனத்துடன் கூடிய வளாகம் சுற்று மதில் சுவற்றுடன் உள்ளது. கோயிலின் மேற்கில் பெரிய தீர்த்த குளம் உள்ளது. கோயில் 2009ல் குடமுழுக்கு கண்டுள்ளது, எனினும் உள்ளடங்கிய கிராமமாக உள்ளதால் இதன் பெருமை வெளியுல மக்களுக்குசென்றடையவில்லை, கோயில் ஒருகால பூஜையுடன் தனது கடமையை முடித்துக்கொள்கிறது. நல்வாய்ப்பாக இக்கோயிலின் அருகில் உள்ள சந்திரசேகரன் என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இக்கோயிலை திறந்து வைத்து பார்த்துக் கொள்கிறார். கோயில் சுற்றிலும் மரங்கள் அதிகமிருக்கின்றன. அதனால் இலை சருகுகள் புல்பூண்டுகள் அதிகம் முளைத்து நிற்கின்றன.
புராண முக்கியத்துவம்
இறைவன் கிழக்கு நோக்கியவராக சதுர பீடம் கொண்டு அழகாக காட்சியளிக்கிறார். இறைவனின் முன்னர் அர்த்த மண்டபம் மகாமண்டபம் ஆகியவை முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை சூரியனே தனி மூர்த்தியாக உள்ளார். வழக்கம் போல் திருப்பணியின்போது தென்முகனின் முகப்பு மண்டபம் கல்வெட்டுக்களை மறைத்து கட்டப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. துர்க்கை சன்னதி புதிதாய் தனித்து எடுக்கப்பட்டுள்ளது சில பழமையான சிலைகள் தோட்டத்து வெளியிலுள்ளன. அம்பிகை திருக்கோயில் தனித்து தெற்கு நோக்கியுள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி