காருக்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
காருக்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
காருக்குடி, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614208.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
மனோன்மணி
அறிமுகம்:
கும்பகோணம் – பட்டீஸ்வரம் – ஆவூர் சாலையில் ஆவூருக்கு முன்னால் வலது புறம் திரும்பும் பாபநாசம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் சாலையோரத்தில் ஒரு பெரிய அரச மரத்தின் கீழ் உள்ளது இந்த சிவன்கோயில். முன்னொரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்த இக்கோயில் காலப்போக்கில் சிதைந்து போக மரத்தடியில் வந்து சேர்ந்தன. விநாயகர் மட்டும் முதலில் கோயில் கொண்டுவிட்டார் போலும். கிராம மக்கள் சிவனுக்கும் ஒரு நீண்ட தகர கொட்டகை அமைத்து வைத்துள்ளனர். இறைவன் கைலாசநாதர் இறைவி மனோன்மணி இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக கிழக்கு நோக்கி உள்ளார். எதிரில் சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. மனோன்மணி அம்மன் தெற்கு நோக்கி உள்ளார் அருகில் உள்ள மரத்தடியில் அழகிய முருகன் மற்றும் ஒரு நாகர் இரு பழமையான நந்திகளும் உள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காருக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி