காயாவூர் சிவன் கோயில், புதுக்கோட்டை
முகவரி
காயாவூர் சிவன் கோயில், காயாவூர், புதுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 614628
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி : செளந்தரநாயகி
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிழக்கே பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது காயாவூர் எனும் சிறு கிராமம். அங்கே கருணையே வடிவாக சிவபெருமான் அழகிய கற்கோவிலில் கோவிற்கொண்டு அருள்பாலிக்கிறார். கோவிலின் பழமையான விமானத்தில் செடிகள் முளைத்துள்ளன. கோவிலின் எதிரில் கலங்கலான நீருடன் அழகிய குளம் ஒன்று அமைந்துள்ளது. கோவிலின் கதவுகள் சிதைவடைந்து காணப்படுகின்றதால் உள்ளே உள்ள திருமேனிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். உள்ளே சிவபெருமான், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், தெட்சிணாமூர்த்தி, கஜ லெட்சுமி ஆகிய திருமேனிகள் உள்ளன. வெளியே நவக்கிரகம் சன்னதியும், பெரிய சிவ லிங்க திருமேனியும் உள்ளது. ஒரு நேர வழிபாடு மற்றும் பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காயாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பட்டுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி