காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), திருவள்ளூர்
முகவரி
காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), காட்டூர், மீஞ்சூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம்- 601203.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ வைத்தியநாதர் இறைவி : ஸ்ரீ தையல்நாயகி
அறிமுகம்
இக்கோயில் திருப்போரூர் மாம்பாக்கம் சாலையில் உள்ளது. திருப்போரூர் இங்கிருந்து 6 கி மீ தொலைவில் உள்ளது. மூலவர் – ஸ்ரீ வைத்தியநாதர் (சுயம்பு), அம்பாள் – ஸ்ரீ தையல்நாயகி. மற்ற சன்னதிகள் கோஷ்ட மூர்த்திகள்,நால்வர், விநாயகர் சேக்கிழார், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி முருகன், கஜ லட்சுமி, அங்காரகன், நவக்கிரகம். இத்தலம் வடவைத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ அகஸ்திய முனிவர் ஈசனை வழிபட்டு மக்கள் பிணிகளை நீக்கியதாக வரலாறு. இங்குள்ள சிவகங்கை தீர்த்தம் அகத்தியரால் உண்டாக்கப்பட்டது. பங்குனி உத்திரம் அன்று சிவசக்தி திருக்கல்யாணத்தை இங்கு கண்டு மகிழ்ந்தார். இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது. அருகில் இருக்கும் வேம்பேடு கிராமத்தில் மலை மேல் உள்ள பைரவரை தரிசித்து பின்னர் உத்திர வைத்தீஸ்வர ஸ்வாமியைதரிசனம் செய்வது மரபு. தொடர்புக்கு திரு புண்ணியகோடி-9884364272, திருஅறிவரசன்- 7550352490, திரு நடராசன்-9445366044.
நம்பிக்கைகள்
பரிகார தலம் செவ்வாய் தோஷம் நீங்கவும் எல்லாவித பிணிக்களுக்கும் பரிகாரம் அளிக்கும் தலமாக விளங்குகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பொன்னேரி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை